Tuesday, October 14, 2008

சந்திராயன் I


சந்திராயன் I என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 2007-08ல் நிகழ்த்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தும். பின்னர் விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருக்கும்.

இப்பணித்திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்து வருகிறார். இத்திட்டத்திற்கு இந்திய ரூபாயில் 3.8 பில்லியன் (சுமார் 83 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.

திட்ட இலக்குகள்

தொலையுணர்வுக் கருவிகளைப் பயன்படுத்தி நிலவின் முழுப்பரப்பிலும் விரவியுள்ள பல்வேறு தாதுக்கள் மற்றும் கதிரியக்க அணுக்கருத் தனிமங்கள் உள்ளிட்ட வேதிமூலகங்களின் பரவலையும், இட விவரங்களையும் முப்பரிமாணத்தில் அதிக துல்லியத்துடன் வரைபடமாக்கல். இதன் மூலம் கிடைக்கும் புதிய தகவல்கள் சூரியக் குடும்பத்தின், குறிப்பாக நிலவின், தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த புரியாத பல புதிர்களுக்கு விடையளிப்பனவாக இருக்கும்.

அறிவியல் ஆய்வுக் கருவிகள், நிலவுக் கலம், ஏவுவாகனம், டி.எஸ்.என் நிலையம் உள்ளிட்ட தரைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் கட்டுப்பாடு, ஒருங்கிணைத்தல் மற்றும் சோதித்தல்,ஏவுதல் மற்றும் ~100கி.மீ நிலவுச் சுற்றுப்பாதையை எய்துதல், சுற்றுப்பாதை ஆய்வுகள், தொலைத்தகவல் பரிமாற்றம், தெரிந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளின் உடனடிப் பயன்பாட்டிற்கான தகவல் சேகரிப்பு மற்றும் தொகுப்பு ஆகியவற்றில் நிர்ணயித்த இலக்குகளை எட்டுதல்

No comments: