Sunday, January 29, 2012

ஆஸி ஓபன் டென்னிஸ் 2012


2012ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் நிலை வீரரான நோவக் டிஜோகோவிக் மற்றும் இரண்டாம் நிலை வீரரான நடாலுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பான போட்டியில் டிஜோகோவிக் சேம்பியன் பட்டம் பெற்றார்.

முதல் செட்டே மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. முதல் செட்டை நடால் கைபற்றினார். இந்த சுற்று சுமார் 88 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டாவது செட்டில் நோவக்  டிஜோகோவிக் வெற்றி பெற்றார். இந்த செட் 66 நிமிடங்கள் நடைபெற்றது. மூன்றாம் செட்டை நோவக் எளிதில் கைப்பற்றினார். இதன் மூலம் நோவக் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. ஆனால் நான்காம் செட் மிகவும் கடுமையாக நடைபெற்றது. இந்த செட் 88 நிமிடங்கள் நீடித்தது. இதில் நடால் வெற்றி பெற்றதால் போட்டி மீண்டும் விறுவிறுப்பானது. ஜந்தாவது செட்டில் இருவரும் தலா 5 கேம் எடுத்திருந்த பொழுதில் நோவக் பிரேக் பாய்ண்ட் பெற்றார். அடுத்த கேமில் வெற்றில் பெற்று 5வது தன் வசம் செய்து சேம்பியன் பட்டம் பெற்றார்.

கிராண்ட்ஸலாம் இறுதி போட்டியில் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியாக இது அமைந்துள்ளது. மொத்தம் 5 மணி 53 நிமிடங்கள் போட்டி நடந்துள்ளது. இந்த வெற்றியோடு 5வது கிராண்ட்ஸலாம் பட்டத்தை நோவக் பெற்றார். ஆஸ்திரேலியா நேரப்படி இரவு சுமார் 1.45 மணிக்கு போட்டி முடிவுக்கு வந்தது. இருவருமே கடைசி வரை விட்டுக்கொடுக்கமலே விளையாடிவந்தனர். இறுதியில் நோவக் சேம்பியன் பட்டம் பெற்றார். இருவருக்கும் வாழ்த்துகள் சேரவேண்டும்.  செட் விவரம் 5-7 6-4 6-2 6-7 (5/7) 7-5 

Friday, January 27, 2012

First American - 3 & 8 Years - Testing, .NET - Salem

Click the image to view the original image

Wednesday, January 25, 2012

Photon Infotech - Project Managers - 7-10Years Bangalore

Click the image to view the full image

Wednesday, January 18, 2012

Photon Infotech - Open Positions - USA


Please check the note points and send your resumes to contactrameshbabu@gmail.com

Tuesday, January 17, 2012

பார் கோடுகளும் நாடுகளும்

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி


சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .


மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

Monday, January 16, 2012

விவேகானந்தரின் பொன்மொழிகள்

  1. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"
  2. உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
  3. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்
  4. உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
  5. அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
  6. தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
  7. கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.
  8. மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.
  9. கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.
  10. சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
  11. ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
  12. உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
  13. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்.
  14. ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
  15. கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.
சுட்டது:- தினமலர்

Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல் 2012

கொத்து மஞ்சள் கிழங்கு தோகையுடன் கரும்பு
மாவிலைத்தோரணம் வாசலில் வண்ணக் கோலம்
இல்லத்தில் அனைவருக்கும் புத்தாடை
பசுவுக்கும் காளைக்கும் அலங்காரம்
உழவருக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள்
தமிழர் திருநாளாம் தைத்திருநாள்
பொங்கும் பொங்கலைப்போல‌
துன்பம் நீங்கி மகிழ்ச்சி பொங்கட்டும்
தித்திக்கும் பொங்கல் வாழ்த்துகள்
பொங்கலோ பொங்கல்

Thursday, January 12, 2012

Samsung - 2010-11 Pass outs - Bangalore


Samsung India Software Operations is hiring for Bangalore Office.

  • BE/ME/MTech/MS of 2010-11 Batch with 70% marks. (Note: Multiple applications will lead to disqualification)
  • Engg. Graduates pass outs from Top Engineering Colleges in India
  • Minimum 6 months of Experience in IT industry
  • Streams: CS, IS,IT, ECE,EEE E&I, Instrumentation, Telecom
  • Only Shortlisted candidates will be invited for selection process

Please note that SISO will shortlisted mostly from Top Engg Colleges.

Note: Comment to get referral id.

Monday, January 9, 2012

உள்ளங்கையில் கணினி - C PAD வெளியீடு

இந்தியாவின் முன்னணி இணையத்தள சேவை நிறுவனம் விசுவல்மீடியா டெக்னாலஜிஸ். கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு அது செயல்பட்டு வருகிறது. மென்பொருள் உருவாக்கம்(Software Development), இணையத் தள வடிவமைப்பு (Website Design) உள்ளிட்ட பல்வேறு தரமான சேவைகளை, கட்டுபடியாகும் விலையில் வழங்கி வருகிறது எம் நிறுவனம்.
வளரும் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் C Pad எனும் கணிப்பலகையை (Tablet Pc) எமது விசுவல்மீடியா டெக்னாலஜிஸ் மூலம் அறிமுகம் செய்யவிருக்கிறோம்.

அதன் முன்னோடியாக, 04.01.2012 விசுவல் மீடியா குழும நிறுவன அலுவலகத்தில் C Pad எனும் கணிப்பலகை வெளியிப்படப்பட்டு உள்ளது. பெரிய பெரிய கணினிகளில் செய்யும் பணிகளை மிக எளிமையாகச் செய்யும் அளவிற்கு C Pad கணிப்பலகை வடிவமைக்கப்பட்டுள்ளது.

7 இன்ச் அகலமும் 1/2 கிலோ எடையும் கொண்ட இக் கணினியை நாம் கையிலேயே எங்கும் எடுத்துச் செல்லலாம். எல்லா இடங்களிலும் இன்டர்நெட்டைக் (Internet) கனெக்ட் செய்யலாம். WiFi, 3G, Lan Cable ஆகியவற்றின் வழியாகவும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். வீடியோ, ஆடியோ ரெக்கார்டர் என எல்லா வசதிகளும் இந்த C Pad கணிப்பலகையில் உண்டு. மேலும் தமிழில் மின்னஞ்சல் செய்திடவும் , பெற்றிடவும் முடியும். மேலும் மாற்றுத்திறனாளிகள் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

கூகிள் நிறுவனத்தின் ஆன்டிராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
இந்த ஆன்டிராய்டு இயங்குதளத்தில் உலகம் முழுதும் பல லட்சக்கணக்கான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வருடத்தின் இறுதியில் இம்மென்பொருட்கள் கோடிகளை அடையும் என்பது எதிர்பார்ப்பு
100 ரூபாய்க்கு அன்லிமிடட் இன்டர்நெட் இணைப்பு.

கிருஷ்ணகிரி நகரத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட நபர்கள் எங்கள் நிறுவனத்தின் சிபேட் கணினியை வாங்கினால் அவர்களுக்கென்று தனி இணைய சேவை வழங்கப்படும். மாதம் 100 ரூபாய்க்கு பாதுகாப்பான இணையத்தள இணைப்பு வழங்கப்படும்.

குழந்தைகளின் கல்வியில் தொடங்கி வியாபாரிகள், நிறுவனங்கள், மருத்துவர்கள் என எல்லா தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இந்த C Pad கணிப்பலகையை வெகு எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் வளர்ந்து வரும் இந்தியத் தொழில்நுட்பச் சந்தையை ஏற்றமுறச் செய்ய எங்களின் எளிய பங்களிப்பு இந்த C Pad கணிப்பலகை.
வாங்குங்கள்! வாழ்த்துங்கள்!!
ஒன்று சேர்ந்து சிகரம் தொடுவோம்!!!.

செய்தி: தமிழ்வணிகம்

Saturday, January 7, 2012

எளிய கணிப்பலகை அறிமுகம்

பெரிய கணினிகள் செய்யும் பணிகளை எளிமையாக்கும் விதத்தில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் சி. பேட் என்ற கணிப்பலகையை அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற இந் நிறுவனத்தின் விழா ஒன்றில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்ட இந் நிறுவனம் இணையதள சேவை, வெப் ஹோஸ்டிங், மென்பொருள் உருவாக்கம், இணைய தள வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

இந் நிறுவனம் வடிவமைத்த இந்த கணிப் பலகையை பேங்க் ஆஃப் பரோடாவின் கிருஷ்ணகிரி கிளை மேலாளர் மார்க்கபந்து வெளியிட, ஐசிஐசிஐ வங்கி கிருஷ்ணகிரி கிளை மேலாளர் ராஜேஷ் பெற்றுக்கொண்டார் 


தளம்: விசுவல் மீடியா
சிபேட்

Sunday, January 1, 2012

புத்தாண்டு வாழ்த்துகள் 2012

புதிய உறுதிமொழிகள் வேண்டாம்
பழைய க்வலைகள் வேண்டாம்
எந்த இலக்குகளும் வேண்டாம்
வருவதை எதிர்கொள்வோம்
வெற்றிகள் குவிப்போம்

புத்தாண்டு வாழ்த்துகள்