Thursday, August 5, 2010

3 நிமிடத்தில் எல்லாம் முடிஞ்சி போச்சி

இன்னைக்கு எல்லா தொலைக்காட்சிச் செய்திகளிலும் தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் 10 நிமிடங்களிலேயே காலியாகி விட்டன என்ற செய்தி நிச்சயம் இடம் பெற்றிருக்கும். சரி அவங்களுக்கு முன்னாடி நாமளே இதை சொல்லிடலாம்னு தான் இந்த பதிவு.


ஆனா பத்து நிமிடம் என்பதெல்லாம் ரொம்ப அதிகமுங்க.8 மணிக்கு தொடங்கிய பதிவு 8.03க்கு எல்லாம் RAC, WL நிலைக்கு போயிடுச்சி. நிச்சயம் தோராயமா 12000 டிக்கெட் விற்றிருக்க வாய்ப்பு இருக்கு. பாண்டியனில் நான் 8.05க்கு பார்க்கும் போது 305 WL என்று பார்க்க முடிந்தது. ரயில் நிலையத்தில் காலையிலேயே விரைவில் வந்து வரிசையில் காத்திருந்து ஏமாந்து போனவர்கள் அனைவரும் இன்று ஆன் லைனில் புக்கிங் செய்பவர்களுக்கு சாபம் விட்டிருப்பார்கள். இதே நிலை ஆன்லைன்ல 5 நிமிசத்துல 300 வெயிட்டிங் அப்படின்னு பார்த்தவங்களும் திட்டி தீர்திருக்க வாய்ப்பிருக்கிறது. 


கடந்த ஆண்டு ஆன்லைன் புக்கிங்கில் ரயில்வே சில திள்ளுமுள்ளு செய்ததாக தின நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது பலருக்கும் நினைவிருக்கலாம். தக்கல் என்று சொல்லப்படம் பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கும் முன் பதிவு செய்யும் டிக்கெட்டுகளின் சதவீதம் சில ரயில்களில் 60% அதிகமாக ஆக்கியதாக செய்தி வெளியானது. இந்த ஆண்டு நிலை என்னவென்று விரைவில் வெளிவரலாம். 


கொசுறு: எப்படியோ ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு RAC ல டிக்கெட் கிடைச்சிருச்சி சாமியோ!!!