Sunday, July 5, 2009

நீண்ட நாட்களுக்குப் பின்னர் டென்னிஸ்

பல வருடங்களுக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தை பார்த்து ரசித்தேன். ஆ, ஊ என்று மிகவும் ரசித்து பார்த்த ஒரு போட்டி. ஜிம் கொரியர், பீட் சாம்ப்ராஸ், அகாசி ஆகியோருக்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த வீரர் ஆண்டி ரோடிக். ரோஜர் ஃபெடரர் மற்றும் ரோடிக் இடையே இறுதி போட்டி. மிகவும் விறுவிறுப்பான போட்டியாக இருந்தது. பல வருடங்களுக்குப்பின்னர் ரோடிக் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறார். முதல் செட்டை தன் வசப்படுத்தி அதிர்ச்சி ஏற்படுத்தினார் ரோடிக். ஆனால் அடுத்து தொடர்ந்து இரண்டு செட்டுகளை பெற்று ஃபெடரர் முன்னிலை பெற்றார். ஏஸ் அடிப்பதில் ஃபெடரருக்கு இணையாருமில்லை என்பதைப்போல பல ஏஸ்களை அடித்துக்கொண்டே சென்றார். 4வது செட்டை அதிரடியாக வென்றார் ரோடிக். ஆட்டம் இறுதி செட்டுக்கு முன்னேறியது. 4வது செட் முடிவடையும் போது ஆட்டம் 2 மணி 41 நிமிடங்கள் முடிவடைந்திருந்தன.




கடைசி செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் அதிரடியாகவே விளையாடினர். ஒருபக்கம் ஃபெடரர் தனது ஏஸ் கணைகளை எறிய மறுபுறம் ரோடிக் தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து முன்னேறினார். இறுதி செட் 90 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடித்துச் சென்றது. ஃபெடரர் இந்த போட்டியில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமையை எட்ட போராடினார். இதற்கு முன்னர் பீட் சாம்ப்ராஸ் இந்த சாதனையை செய்திருந்தார், அவரும் ஆட்டத்தை காண வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 4 மணி நேரங்களையும் கடந்து ஆட்டம் சென்றது. 50 ஏஸ்களை அடித்து ஃபெடரர் தனது வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 7-5, 6-7.6-7, 6-3, 14-16 என்ற புள்ளிகளில் 4 மணி 15நிமிடங்களில் ஆடி வெற்றி பெற்றார் ஃபெடரர். அத்துடன் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம்(15) வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 6வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை அவர் வென்றுள்ளார். ஆட்டம் முடிந்த சில நிமிடங்களில் கோப்பை பரிசளிப்பு, பேட்டி என்று விரைவாக முடிவடைந்தது.

Thursday, July 2, 2009

6th sense device from TED

Can you believe this!!
Check where technology moves on