இது எந்த படத்தும் அடிக்கிற போஸ்டர் இல்லீங்க. இன்னும் சில மணி நேரங்களில் விடை பெற இருக்கும் 2008 ஆம் ஆண்டுக்கான போஸ்ட்(டர்).
நாட்டுல என்ன என்னவோ நடந்து முடிஞ்சிடுச்சி. அதே மாதிரி நம்ம வாழ்க்கையிலும் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்.
அடுத்த ஆண்டாவது நள்ள ஆண்டாக இருக்கனும், தொழில் நல்ல படியா நடக்கனும், நல்லா படிச்சி நிறைய மார்க் வாங்கனும், பங்குச்சந்தை முன்னேறனும், கிரிக்கெட்ல இந்தியா எல்லா தொடர்லையும் ஜெயிக்கனும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை வரக்கூடாது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருக்கனு, நம்ம கட்சி ஆட்சியை பிடிக்கனும், தலைவர் படம் ஹிட் ஆகனும், மழை பெய்தாலும் வெள்ளம் வராம இருக்கனும், வெள்ளம் வந்தாலும் நிவாரணம் விரைவா கிடைக்கனும், விலை வாசி குறையனும், தங்கம் விலை சரியனும், புதிசா வீடு கட்டணும், கார் வாங்கனும், பைக் வாங்கனும், நெக்லஸ் வாங்கனும், பாஸ் கிட்ட நல்ல பேர் வாங்கனும், அப்பா/வாத்தியார் கிட்ட அடி வாங்க இருக்கனும், கம்பெனில என்னோட டீம்ல நல்ல அழகான பொண்ணு வரனும், ஒரு தடவை அமெரிக்கா போய்ட்டு வந்திடனும், இந்த முறையாவது லவ் பண்ற பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணிடனும், ப்ளாக்ல நிறைய பதிவு போடனும், தம்/தண்ணி அடிக்கிறதை நிப்பாட்டனும், தினமும் குளிக்கனும், செலவை கம்மியாக்கனும், கிரெடிட் கார்டை தூக்கி எறியனும், லஞ்சம் வாங்கக்கூடாது, ........உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்படி எத்தனையோ ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் பலரது மனதில் இருக்கும். நல்லவை நல்லபடியா நடக்கனும், சந்தோஷம் பெருகனும், செல்வம் கொழிக்கனும், வெற்றி கிடைக்கனும், புத்தாண்டு எல்லாருக்கும் நல்ல படியாக இருக்கனும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
1 comment:
தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment