மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி திரு.ஸ்டீவ் பால்மர், மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் தமிழாக்கம் தமிழ் வணிகம் வாசகர்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது .
கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை அசுர வளர்ச்சியடைந்ததன் மூலம் உலகில் மிகப்பெரிய மாற்றங்கள், புரட்சிகள் ஏற்பட்டன எனலாம். இந்தப் புரட்சி மற்றும் மாற்றங்கள் வாயிலாக ஒருவரை மற்றொருவர் இப்படித்தான் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை மாறி, இப்படியும் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம், இந்த விஷயங்கள்தான் என்றில்லாமல், எல்லா விஷயங்களையும் இன்றைக்கு ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொண்டு தன் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அந்த அளவுக்கு இன்றைய சூழலில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில், தகவல் கூறுபவரும் சரி, தகவல் பெறுபவரும் சரி, இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையும் மாறி, எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்தில் இருந்து மற்றொருவரை தொடர்பு கொள்ளலாம் அல்லது...எந்த இடத்தில் இருந்தும் தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை, விஷயங்களைத் தெரிவிக்கலாம். அந்த அளவுக்கு இன்றைய தகவல் தொழில்நுட்பமானது இமாலய வளர்ச்சி பெற்றுள்ளது.
இத்துறையைப் பொறுத்தவரை, இன்று கண்டுபிடிக்கப்படும் ஒரு பொருள் நாளையே பழையதாகிவிடும். அந்த அளவுக்கு அசூர வளர்ச்சியில் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதோடு இத்துறையில் தினம் ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்து கொண்டுள்ளது. அப்படியே, இத்துறையில் தினம் ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்தாலும், ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு அப்படியே மக்கள் மனதில் நன்கு பதிந்து விடும். அம்மாதிரியான கண்டுபிடிப்புகளும் இத்துறையில் சாத்தியம். அந்த வகையில் " Cloud Computing" என்ற கண்டுபிடிப்பைக் கூறலாம். இந்த முகில் கணினி இம்முறையின் மூலம், ஒரே நேரத்தில் இவ்வளவு பேர்தான் என்றில்லாமல், எவ்வளவு பேர் வேண்டுமானாலும் எங்கும் தொடர்புகொண்டு பேச முடியும். தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடியும்.
அதுபோல், பரிமாறிக் கொள்ளும் தகவல்களை கணினியில் சேமித்து வைப்பதும் சாத்தியம். அந்த அளவுக்கு " Cloud Computing" கண்டுபிடிப்பில் ஏராளமான அனுகூலமான விஷயங்கள் உள்ளன.
ஆனால், இதுபோன்ற மாற்றங்கள், புரட்சிகள் அனைத்தும் வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. ஆனால், வீட்டிலுள்ள கணினியில் அவ்வளவு எளிதாகச் சாத்தியமாகாமல் போகிறதே? இந்தக் கேள்வி உள்பட, ஏராளமான கேள்விகளுக்கு விடை காணும் வகையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் Professional Developers Conference என்ற கூட்டம் கூட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், வீட்டில் உள்ள கணினிகளுக்கும் இதுபோன்ற பயனுள்ள சில கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய மென்பொருள் கண்டுபிடிப்புப் பற்றியும், அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் புதிய மென்பொருள், தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது பயன்படுத்தப்படும் கண்டுபிடிப்புகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கணினி வல்லுநர்கள் சிலர் கூறுகையில், இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரில், இ&மெயிலுக்காக பயன்படுத்துவோரின் எண்ணிக்கைதான் அதிகம்.
இதற்காக, தனியே கணினியின் உதவி தேவைப்படுகிறது. என்னதான், கையடக்க அலைபேசியிலேயே (மொபைல்போன்) இணையத்தளத்தை பார்க்கும் வசதி இருந்தாலும், அதிலும் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு சில விலை உயர்ந்த அலைபேசியில் மட்டும்தான் எவ்வித சிரமமும் இன்றி இணையத்தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விலையுயர்ந்த அலைபேசியை வாங்கிப் பயன்படுத்துவது என்பது அனைவராலும் சாத்தியப்படாது. எனவே, சாதாரண பாமர மக்களும் கணினி மட்டுமல்லாது தங்களிடம் இருக்கும் அலைபேசி உள்ளிட்ட எந்தத் தகவல் தொழில்நுட்பக் கருவியிலேயே இணையத்தளம் மூலம் தகவல் பரிமாற்றத்தைச் செய்து கொள்ளும் வகையில் புதிய மென்பொருள் தயாரிக்கப்பட வேண்டும்....கண்டுபிடிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது, என்றனர்.
Source: Tamilvanigam.in
No comments:
Post a Comment