Thursday, December 18, 2008

விண்டோஸ் அசூர் : அடுத்த தலைமுறைக்கான முகில் கணினி - பாகம் 2

மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி திரு.ஸ்டீவ் பால்மர், மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் தமிழாக்கம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

* Cloud Computingக்கான ஒரு புதிய தளம்

இக்கூட்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான விண்டோஸ் அஸ்யூர் (Windows Azure) பற்றி விவாதிக்கப்பட்டது. இதில், விண்டோஸ் அஸ்யூரானது, ஒரே நேரத்தில் கணினி, இணையத்தளம், அலைபேசி என மூன்றிலும் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஏற்ற மென்பொருளாகும். மேலும், விண்டோஸ்7, விண்டோஸ் சர்வர் 2008 ஆர் 2 என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த மென்பொருள் இயங்கும் வகையில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.
இதில், விண்டோஸ்7 என்பது தற்போது பயன்படுத்தப்படும் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு அடுத்த மாற்று ஆபரேட்டிங் சிஸ்டமாகும். இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தில், இப்போதுள்ள தகவல் பரிமாற்றத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கனவே வழக்கத்தில் உள்ள வேர்டு எக்ஸல் பவர்பாயின்ட் போன்றவற்றிலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டு, தகவல் பரிமாற்றத்துக்கு ஏற்ற வகையில் செய்யப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு, இப்போதுள்ள மைக்ரோசாப்ட் வேர்டுவில் உள்ள வார்த்தைகளை, இணையத்தளத்தில் இருந்தவாறே வெட்டவோ, நீக்கவோ, அதில் ஏதேனும் திருத்தங்களோ செய்ய முடியாது. ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருளில், இதுபோன்ற குறைபாடுகள் நீக்கப்பட்டு, தகவல் பரிமாற்றத்துக்கு ஏற்ற வகையில், மிகவும் சுலபமாக வார்த்தைகளை கத்தரித்து, நீக்கி, சேர்த்து என எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினியில் மட்டுமல்லாது, அலைபேசியில் இணையத்தளத்தைப் பயன்படுத்தும்போதும், இவ்வாறு செய்யலாம். அந்த வசதி, இந்த மென்பொருளில் செய்து தரப்பட்டுள்ளது.
விண்டோஸ் அஸ்யூர்ரானது, மென்பொருள் என உறுதியாகக் கூற முடியாது. அது ஒரு புதிய கண்டுபிடிப்பு. அவ்வளவுதான். எனவே, இதை வணிக ரீதியிலான அலுவலகங்கள், தங்கள் சர்வர் கணினியில் போட்டு பயன்படுத்த முடியாது. தற்போதைய வியாபார உலகில், தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமைபடுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய கண்டுபிடிப்பு. எனவே, இதை மற்ற இதர மென்பொருட்களைப் போல் அவ்வளவு எளிதாக சர்வர் கணினியில் போட்டு பயன்படுத்த முடியாது. அதே சமயம், ஒரு அலுவலகத்துக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் தேவையான தகவல் பரிமாற்றங்களை மேலும் எளிமையாக்கும் வகையில் இந்தக் கண்டுபிடிப்பு 100 சதவீதம் வெற்றிகரமாகச் செயல்படும் என்பதில் மட்டும் எள்ளளவும் சந்தேகமில்லை.

* மென்பொருள் மற்றும் அதற்க்கான சேவை
--------------------------------------------------------------------------------


பொதுவாகவே, எந்த ஒரு நிறுவனமும் மென்பொருள் தயாரித்து, சந்தைப்படுத்தியபின் அந்த மென்பொருள் மீதான சேவையைத் தொடர வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர் மத்தியில் அந்த மென்பொருளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில், விண்டோஸ் அஸ்யூர்க்கு கண்டிப்பாகச் சேவை என்பது 100 சதவீதம் நிச்சயம் உண்டு. மேலும், இந்தக் கண்டுபிடிப்பைச் சந்தைப்படுத்துதலுக்கு முன்னரே பல வகையிலும், பல கட்டத்திலும், ஏராளமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சேவை என்பது மென்பொருட்களைப் பொறுத்தவரை இணையத்தள ரீதியிலான சேவைகளைத்தான் குறிப்பிடுவர். அந்த வகையில், விண்டோஸ் அஸ்யூருக்கு இணையத்தள ரீதியிலான சேவைகள் கண்டிப்பாகச் செய்யப்படும். வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகள், உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். இந்தப் புதிய விண்டோஸ் அஸ்யூரை பயன்படுத்தும் நபர்கள் கண்டிப்பாக, இதுவரை இல்லாத ஒரு புதுவித அனுபவத்தைப் பெறுவது நிச்சயம். அந்த அளவுக்கு, இந்த புதிய மென்பொருளில் ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. குறிப்பாக, தகவல் பரிமாற்றத்துக்காக மட்டுமே ஏராளமான விஷயங்கள் இந்த மென்பொருளில் புகுத்தப்பட்டுள்ளன.
எனவே, இந்த புதிய மென்பொருளைப் பயன்படுத்தும் நபர்கள் கண்டிப்பாகப் புதிய தலைமுறை மென்பொருளைப் பயன்படுத்துகிறோம் என்ற அனுபவத்தைப் பெறுவது நிச்சயம் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

* தனியாள் கணினிகள் மேம்படுத்துதல்
--------------------------------------------------------------------------------


கிளவுட் கம்ப்யூட்டிங் என்பதே, ஒரே நேரத்தில் யார் வேண்டுமானாலும், எங்கிருந்தபடியும், தங்களுடைய கருத்தை, தகவலைப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான். மேலும், இதற்காக வேறு எந்தப் பிரத்யேகக் கருவியையும் தேடாமல், நம் கையிலேயே உள்ள சாதாரண அலைபேசியை வைத்தேகூட இணையத்தளத்தைப் பயன்படுத்தி தகவல்களை எளிதாகப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தகவல் பரிமாற்றத்தில் இதுநாள்வரை உள்ள கட்டுப்பாடுகளையும், கட்டமைப்புகளையும் உடைத்து, இன்னும் எளிமைப்படுத்துவதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தகவல் பரிமாற்ற உலகில் இனி கிளவுட் கம்ப்யூட்டிங்கும், அதற்குப் பெரிதும் உதவிடும் வகையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விண்டோஸ் அஸ்யூர் மென்பொருளும், அந்த மென்பொருளுக்குத் தேவையான ஆன்லைன் சேவைகளும், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. மேலும், பரந்து விரிந்த இந்த உலகை, ஏற்கனவே இணையத்தளம் என்ற ஒன்றின் மூலம், கணினி அளவுக்குச் சுருக்கி விட்டோம்.
இனி, அதை மேலும் சுருக்கி, கையடக்க அலைபேசியிலேயே நம் உலகைக் கொண்டு வந்து விடும் அளவுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங்கும், அதற்கு உதவிடும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட விண்டோஸ் அஸ்யூர் மென்பொருளும், மிகப்பெரிய அளவில் தகவல் பரிமாற்ற உலகில் புகுந்து விளையாடப் போகின்றன.

இனி, கணினி என்பது வெறும் தகவல்களைச் சேமிக்க வைக்க உதவும் ஒரு கருவியாகத்தான் பயன்படப் போகிறது. இணையத்தளத்தைப் பொறுத்தவரை, இனி கையடக்க அலைபேசியே போதும் என்ற நிலை இனி வந்து விடும். இதுதவிர, வழக்கமாக நாம் அலைபேசியைப் பயன்படுத்தும் காரியங்களுக்கும் எப்போதும் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து கணினி மென்பொருள் வல்லுநர்கள் சிலர் கூறுகையில், தகவல் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை, இனி கிளவுட் கம்ப்யூட்டிங்கையும், விண்டோஸ் அஸ்யூரையும் யாராலும் மறுக்க முடியாது. கையடக்க அலைபேசி, கணினி மற்றும் இணையத்தளம் இம்மூன்றையும் ஒரே நேரத்தில் இணைக்க இனி பெரிதும் பயன்படப் போவது இவ்விரண்டும்தான். எனவே, இனி தகவல் பரிமாற்றத்துக்காக யாரும், எங்கும் அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியோ அல்லது அலுவலகத்தில் இருந்தபடியோ அல்லது வேறு எங்கேனும் இருந்தபடியோ மிகவும் எளிதாக தகவல்களைப் பெற முடியும். தகவல்களை அனுப்ப முடியும். அதுபோல், பெறப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும் முடியும்.

Source : Tamilvanigam

No comments: