
இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை தடுக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று 21ம்தேதி 67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு முகாம்களில் வழங்கபடுகிறது. அரசு மாநகராட்சி மருத்துவமனைகள், சத்துணவு கூடங்கள், சுற்றுலா மையங்கள், பஸ், ரயில், விமான நிலையங்கள், மெரினா கடற்கரை என 40 ஆயிரத்து 399 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். நடமாடும் பூத் மூலமாகவும் சொட்டு மருந்து வழங்கப்படும். சென்னையில் சொட்டு மருந்து முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார். 2வது கட்ட முகாம் பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.
1 comment:
போலியோ சொட்டுமருந்து கொடுத்துட்டோம்ல - பிள்ளைக்கு.
Post a Comment