
கணினி என்றாலே நமக்கெல்லாம் ஆச்சர்யம்தான் வரும்? ஏனெனில் முழுவதும் இயந்திரங்களை கொண்டு அவைகளை கட்டுப்படுத்தி
மென்பொருள் எனப்படும் நிரலாக்கங்களை கொண்டு தேவையான போது மட்டும் மின்சாரத்தினை பெற்று இயங்குகின்றன. 0,1, ஆமாம், இல்லை என்ற இரு வார்த்தைகளை மட்டுமே தன் அகராதியாக வைத்துள்ள கணினி ஓர் மனிதன் போன்று அசாதாரணமாக கணக்கு, மனிதனின் தேவைகளை பூர்த்திச் செய்யக்கூடிய ரோபோ என அனைத்திலும் 0, 1 என்ற இரண்டு வார்த்தைகள்தான். ஆனால் அவைகளை வைத்து இன்று மனிதன் நமது அண்டவெளியின் எல்லையினையும் அறிய முயற்சி செய்து வருகிறான்.
இதற்கெல்லாம் ஓர் அத்தியாவசியமானது.
கணினியில் உள்ள ஃப்ராசசர்கள்தான். ஏன் அப்படி? நமக்கு முழு உடம்பு இருந்தாலும் அவற்றின் வேலைகளை நரம்புகளை கொண்டு மேலாண்மை செய்வது மூளைதான். அதே போலதான் மதர்போர்டும், ஃப்ராசசரும் இணைந்ததுதான் கணினி. எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த எந்த இடத்திலும் ஒரு ஃப்ராசசர் என்பது தேவையான ஒன்று. எனெனில் அது எந்த பயன்பாட்டுக்கு தேவை என்பதை மனதில் கொண்டு உருவாக்கப்படுபவை.சரி இது இங்கே எதற்கு என்கிறீர்களா?
உலகம் முழுவதும் கணினி நுகர்வோர் கணினியை வாங்க வேண்டும் என்றால் முதலில் கேட்பது இன்டெல் ப்ராண்டா? என்பதுதான். ஏனெனில் இன்று முழுமையான பயன்பாட்டில் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருப்பது இன்டெல் தயாரிப்புகளைத்தான். இன்டெல் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தனது தயாரிப்புகளை மேம்படுத்தி வெளியிட்டு வருகிறது .
ஆனால் தற்போது இன்டெல் நிறுவனம் இப்போதைய ப்ராசசர்களிலிருந்து வெளிவந்து புதிய தொழில்நுட்பத்துடன் intel core i 7 எனும் புதிய ஃப்ராசசர் - ஐ வெளியிட்டுள்ளது.
இந்த ப்ராசசரானது கணினியின் பயன்பாட்டை அதிகமாக பயன்படுத்தும் வீடியோ, ஆடியோ எடிட்டிங், விளையாட்டுக்களை தடையில்லாமல் இயக்கவும், மேலும் கணினியில் வேகத்தை குறைக்காமல் இயங்கும் வகையில் தனது புதிய ஃப்ராசசரை வெளியிட்டுள்ளது.
பொதுவாகவே எப்போது செயல்திறன் மேம்படுத்தப்பட்டாலும் அதற்கேற்றார்ப்போல் கணினியின் மின்சாரமும் அதிகமாகவே கணினி எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த நிலை மாறி கணினியின் செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில் புழக்கத்தில் இருக்கும் கணினிகள் எடுத்துக்கொள்ளும் மின்சார அளவை விட 40% குறைவாக எடுத்துக்கொண்டு இயங்குகிறது இந்த புதிய ஃப்ராசசர் intel core i 7.
அது மட்டுமல்ல முப்பரிமாணத் தொழில் நுட்பத்துடன் கூடிய செயல்களை core i7 ஃப்ராசசர்
கணிணியில் வழக்கத்தை விட 40 மடங்கு வேகத்தில் விரைவாக செய்து முடிக்க முடியும்.
இன்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழில்நுட்பங்களையும், வாடிக்கையாளர்களுக்கு செலவினை குறைக்கம் வகையிலும்
நாளைய தொழில் நுட்பத்தை இன்றே அறிமுகம் செய்து விட வேண்டும் என்ற துடிப்பில், மிகச் சிறப்பான அம்சங்களுடன் இந்தப் புதிய ஃப்ராசசர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்டெல் நிறுவனத்தின் தெற்காசிய வர்த்தக இயக்குனர் பிரகாஷ் பக்ரி தெரிவித்தார்.
இப்புதிய ஃப்ராசசரில் பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
டர்போ பூஸ்ட் தொழில்நுட்பம்
இன்டெல் நிறுவனம்
தனது தனித்தன்மை வாய்ந்த டர்போ பூஸ்ட் டெக்னாலஜி மூலம் கணினியின் செயல்திறனை அதிகப்படுத்தி நமது வேலைகளை மிக எளிதில் முடித்துவிடுகிறது. இந்த டர்போ பூஸ்டரானது ஒன்று அல்லது பல்வேறு செயலாக்கங்களுக்கு ஏற்றார்ப்போல் தானாகவே செயல்பட்டு கணினியை வெகு வேகமாக இயக்கிட வழி செய்கிறது.
ஹைப்பர் திரட்டிங் தொழில்நுட்பம் , ஸ்மார்ட் கேச் , இன்டெல் குயிக் பாத் இன்டர்கனெக்ட்,
உள்ளிணைந்த மெமரி கண்ட்ரோலர் , மற்றும் எச்டி பூஸ்டு போன்ற தொழில்நுட்பங்களை கொண்டுள்ள இந்திய புதிய ஃப்ராசசரானது அதிவேகமாக கணினியை இயக்குவோர்களின் விருப்ப தேர்வாக அமையும்.
இந்திய வாடிக்கையாளர்கள் Core I7 Processor பொருத்தப்பட்ட கணிணிகளை HCL, Wipro, Acer மற்றும் Dell நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும், இணைய வர்த்தகத்தின் மூலமாகவும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம். புதிய கணிணியின் மேலதிகச் சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இன்டெல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முகவரி www.intel.com/pressroom
www.blogs.intel.com
No comments:
Post a Comment