Tuesday, December 23, 2008

பழமையான முதல் 100 டாட்காம் தளங்கள் - பட்டியல்

வளர்ந்து வரும் நாடுகளில் இன்டர்நெட் வசதி இல்லாத நகரம் என்று இல்லையென்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கிறது. ஒரு காலத்தில்(ரொம்ப இல்லீங்க 10 வருசத்துக்கு முன்னாடி வச்சிக்கோங்க) பெரிய நிறுவனங்கள் மட்டுமே இணைய வசதி, தன்க்கென்று இணையதளங்களை வைத்திருந்தன. ஆனால் இந்த 10 ஆண்டுகளில் தனி நபர் ஒருவரும் தனக்கென்று இணையதளம் அப்படி இல்லையென்றால் வலைப்பூ வைத்திருக்கும் அளவுக்கு வசதிகள், தொழில்நுட்பம் முன்னேறி விட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் ரீவைண்ட் செய்தால் இன்டர்நெட்டின் ஆரம்ப காலத்து செல்ல முடியும். பெரிய நிறுவனங்கள் அப்போது தான் தோன்றத்துவங்கிய காலம். புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகம், புதிய புரோகிராம் அறிமுகம் என்று பல்வேறு பெரிய நிறுவனங்கள் தங்களை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்திய காலம். MS Dos, Turbo C என்று புதிது புதிதாக டெக்னிக்கல் வார்த்தைகள் வெளிவந்தன. அதே காலகட்டத்தில் தான் இன்டர்நெட் வசதியும் ஏற்படத்தொடங்கியது.

சரி யார் முதன் முதலில் தனக்கென்று புதிய இணையதளம் தொடங்கினார்கள் என்று பார்ப்போம். இப்போது இருக்கும் ஜாம்பவான்களான யாஹூ, கூகுள் போன்ற நிறுவனங்கள் எல்லாம் அப்போது இணையதளங்களை தனக்கென்று உருவாக்கவில்லை. முதன் முதல் அறிமுகமான இணையதளம் symbolics.com. 1985 ஆம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இந்த இணையத்தளம் அறிமுகமானது. கணினி தயாரிக்கும் நிறுவனம் இந்த தளத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த நிறுவனம் 90களில் திவால் ஆனது. ஆனாலும் பல புதிய உரிமையாளர்களால் தொடர்ந்து இயங்கி வருகிறது. உலகின் முதல் இணையதளம் என்ற பெருமையையும் தொடர்ந்து இயங்கிவரும் பெருமையையும் இது பெற்றுள்ளது. இதன் பிறகு பெரிய நிறுவனங்களான ஹச்.பி, ஐபிஎம், ஏடி&டி, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் இணையதளம் உருவாக்கின. மைக்ரோசாப்ட் நிறுவனமே 1991 ஆம் ஆண்டு தான் தனக்கென்று இணையதளம் உருவாக்கியது. யாஹூ நிறுவனம் 1995ல் தனது இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. 1997ல் கூகுள் தனது தளத்தை உருவாக்கியது. இன்று கணக்கில் அடங்கா இணையதளங்கள் பல உருவாகி உள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் பல லட்சம் கோடிகளை இணையதள எண்ணிக்கை தாண்டும் என்றும் கருத்து நிலவுகிறது.
சரி இனி முதன் முதலில் உருவாக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலைப்பார்ப்போம்


1. symbolics.com: மார்ச் 15, 1985
2. bbn.com: ஏப்ரல் 24, 1985
3. think.com: மே 24, 1985
4. mcc.com: ஜீலை 11, 1985
5. dec.com: செப்டம்பர் 30, 1985
6. northrop.com: நவம்பர் 7, 1985
7. xerox.com: ஜனவரி 9, 1986
8. sri.com: ஜனவரி 17, 1986
9. hp.com: மார்ச் 3, 1986
10. bellcore.com: மார்ச் 5, 1986
11. ibm.com: மார்ச் 19, 1986
12. sun.com: மார்ச் 19, 1986
13. intel.com: மார்ச் 25, 1986
14. ti.com: மார்ச் 25, 1986
15. att.com: ஏப்ரல் 25, 1986
16. gmr.com: மே 8, 1986
17. tek.com: மே 8, 1986
18. fmc.com: ஜீலை 10, 1986
19. ub.com: ஜீலை 10, 1986
20. bell-atl.com: ஆகஸ்டு 5, 1986
21. ge.com: ஆகஸ்டு 5, 1986
22. grebyn.com: ஆகஸ்டு 5, 1986
23. isc.com: ஆகஸ்டு 5, 1986
24. nsc.com: ஆகஸ்டு 5, 1986
25. stargate.com: ஆகஸ்டு 5, 1986
26. boeing.com: செப்டம்பர் 2, 1986
27. itcorp.com: செப்டம்பர் 18, 1986
28. siemens.com: செப்டம்பர் 29, 1986
29. pyramid.com: அக்டோபர் 18, 1986
30. alphacdc.com: அக்டோபர் 27, 1986
31. bdm.com: அக்டோபர் 27, 1986
32. fluke.com: அக்டோபர் 27, 1986
33. inmet.com: அக்டோபர் 27, 1986
34. kesmai.com: அக்டோபர் 27, 1986
35. mentor.com: அக்டோபர் 27, 1986
36. nec.com: அக்டோபர் 27, 1986
37. ray.com: அக்டோபர் 27, 1986
38. rosemount.com: அக்டோபர் 27, 1986
39. vortex.com: அக்டோபர் 27, 1986
40. alcoa.com: நவம்பர் 5, 1986
41. gte.com: நவம்பர் 5, 1986
42. adobe.com: நவம்பர் 17, 1986
43. amd.com: நவம்பர் 17, 1986
44. das.com: நவம்பர் 17, 1986
45. data-io.com: நவம்பர் 17, 1986
46. octopus.com: நவம்பர் 17, 1986
47. portal.com: நவம்பர் 17, 1986
48. teltone.com: நவம்பர் 17, 1986
49. 3com.com: டிசம்பர் 11, 1986
50. amdahl.com: டிசம்பர் 11, 1986
51. ccur.com: டிசம்பர் 11, 1986
52. ci.com: டிசம்பர் 11, 1986
53. convergent.com: டிசம்பர் 11, 1986
54. dg.com: டிசம்பர் 11, 1986
55. peregrine.com: டிசம்பர் 11, 1986
56. quad.com: டிசம்பர் 11, 1986
57. sq.com: டிசம்பர் 11, 1986
58. tandy.com: டிசம்பர் 11, 1986
59. tti.com: டிசம்பர் 11, 1986
60. unisys.com: டிசம்பர் 11, 1986
61. cgi.com: ஜனவரி 19, 1987
62. cts.com: ஜனவரி 19, 1987
63. spdcc.com: ஜனவரி 19, 1987
64. apple.com: பிப்ரவரி 19, 1987
65. nma.com: மார்ச் 4, 1987
66. prime.com: மார்ச் 4, 1987
67. philips.com: ஏப்ரல் 4, 1987
68. datacube.com: ஏப்ரல் 23, 1987
69. kai.com: ஏப்ரல் 23, 1987
70. tic.com: ஏப்ரல் 23, 1987
71. vine.com: ஏப்ரல் 23, 1987
72. ncr.com: ஏப்ரல் 30, 1987
73. cisco.com: மே 14, 1987
74. rdl.com: மே 14, 1987
75. slb.com: மே 20, 1987
76. parcplace.com: மே 27, 1987
77. utc.com: மே 27, 1987
78. ide.com: ஜீன் 26, 1987
79. trw.com: ஜீலை 9, 1987
80. unipress.com: ஜீலை 13, 1987
81. dupont.com: ஜீலை 27, 1987
82. lockheed.com: ஜீலை 27, 1987
83. rosetta.com: ஜீலை 28, 1987
84. toad.com: ஆகஸ்டு 18, 1987
85. quick.com: ஆகஸ்டு 31, 1987
86. allied.com: செப்டம்பர் 3, 1987
87. dsc.com: செப்டம்பர் 3, 1987
88. sco.com: செப்டம்பர் 3, 1987
89. gene.com: செப்டம்பர் 22, 1987
90. kccs.com: செப்டம்பர் 22, 1987
91. spectra.com: செப்டம்பர் 22, 1987
92. wlk.com: செப்டம்பர் 22, 1987
93. mentat.com: செப்டம்பர் 30, 1987
94. wyse.com: அக்டோபர் 14, 1987
95. cfg.com: நவம்பர் 2, 1987
96. marble.com: நவம்பர் 9, 1987
97. cayman.com: நவம்பர் 16, 1987
98. entity.com: நவம்பர் 16, 1987
99. ksr.com: நவம்பர் 24, 1987
100. nynexst.com: நவம்பர் 30, 1987


5 comments:

puduvaisiva said...

Thank for your service to know the old and top Rank sites

Puduvai siva

rameshbabublogger said...

உங்கள் கருத்துக்கு நன்றி சிவா.

RAMASUBRAMANIA SHARMA said...

Useful Informations....Thanks a lot...

rameshbabublogger said...

உங்கள் கருத்துக்கு நன்றி ராம சுப்ரமணிய ஷர்மா

Tech Shankar said...

நன்றி