Saturday, June 2, 2007

குறுந்தகவல் - 4

காதலில் கண்களின் அசைவுகளுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
ஆனால் நட்புக்குள் கண்களின் அசைவுகளுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான்
"மச்சி அந்த ஃபிகரை பாருடா"

அழும் போது தனியாக அழு. சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி. கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள் - கண்ணதாசன்

இராமாயணத்துல இராவணனுக்கு 20 கண்ணு, ஆனா அவன் ஒரு பொண்ணைதான் பார்த்தான்.
உனக்கு 2 கண்ணு, ஒரு நாளைக்கு 20 பொண்ணை பாக்குற, யாரு பெரிய கேடி?

பையன்: அப்பா ஓவரா என்னை பக்கத்து வீட்டு பொண்ணோட கம்பேர் பண்ணீல பாரு அவ 470 மார்க், நான் 480 மார்க்.
அப்பா: லூசு, அவ 10-ம் வகுப்பு, நீ 12-ம் வகுப்புடா

மண்டை உடையாம இருக்க ஹெல்மெட் போடலாம், ஆனா ஹெல்மெட் உடையாம இருக்க மண்டைய போடமுடியுமா?
- இவண், ஹெல்மெட் போடாமல் போலீஸுக்கு டிமிக்கு கொடுக்கும் சங்கம்

அரசன்: அமைச்சரே, போரில் எதிரி படைகள் ஒடிய ஓட்டத்தை நினைத்தால் சிரிப்பு வருகிறது.
அமைச்சர்: ஆம் மன்னா, எவ்வளவு ஓடியும் அவர்களால் நம்மை புடிக்கவே முடியவில்லை.

நண்பன்1: நான் என்ன செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்க நிக்குறாடா
நண்பன்2: கார் ஓட்டிப்பாரேன்

என்னை வெல்வதற்கு யாருமில்லை உன் அன்பைத்தவிற
என்னை கொல்வதற்கு யாருமில்லை உன் பிரிவைத்தவிற

அவள் மூச்சுக்காற்றே உன் மூச்சுக்காற்று
அவள் இதய துடிப்பே உன் இதய துடிப்பு
அவள் அன்பே என்றும் மாறாத அன்பு
-அம்மா

உன்னை நான் என் இதயமென்று சொல்லமாட்டேன், ஏனென்றால் நீ துடித்து நான் உயிர் வாழ விரும்பவில்லை.

No comments: