Thursday, April 12, 2007

குறுந்தகவல்-2

கருவறையை விட்டு கீழே இறங்கி கல்லறை நோக்கி நடந்து செல்லும் தூரம் தான் வாழ்க்கை.

ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் விண்ணில் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் உறவுகள் மண்ணில் இருந்தாலும் வாழ்க்கைக்கு அழகு நட்புதான்.

ரோடுல போற பொண்ணைப்பார்த்தா பொறுக்கின்னு சொல்றாங்க. ஆனா வீட்டுல போய் பொண்ணைப்பார்த்தா மாப்பிள்ளைன்னு சொல்றாங்க. என்ன சமுதாயங்க இது!!!

லேட்டஸ்ட் திருக்குறள்
பீடியால் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே
பிராந்தியால் வெந்த வயிறு

மழைக்கு அழத்தான் தெரியும், சிரிக்கத்தெரியாது. சூரியனுக்கு எரிக்கத்தான் தெரியும் அணைக்கத்தெரியாது. எனக்கு நினைக்கத்தான் தெரியும், மறக்கத்தெரியாது.

பீர் பொங்குவது போல் உன் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும். சிகரெட் புகைபோல் உன் புகழ் பரவட்டும். பான் பராக் சுவை போல் என்றும் உன் வாழ்க்கை இனிக்கட்டும்.

அந்தக்கறை, இந்தக்கறை எந்தக்கறையா இருந்தாலும், சர்ப் எக்ஸல் போட்டா போயிடும். போகாத ஒரே ஒரு கறை, அது நான் உங்கமேல வச்சிருக்க அக்கரை.

இன்று மியூசிக் காலேஞ்க்கு விடுமுறை. என்னவளின் கொலுசு தொலைந்ததால்.

No comments: