Friday, December 19, 2008

SMS பிரியர்களே வாங்க - தமிழ்

நீண்ட நாட்களாக எனக்கு வந்த குறுந்தகவல்களை சேர்த்து வைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நல்லாருந்தா நீங்களும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தட்டிவிடுங்க. பழசு, புதுசு, கடி, ரொமான்ஸ் எல்லாமே இருக்கும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மேனேஜர்: எங்க பேங்க்ல இன்ட்ரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்
சர்தார்: கொடுக்குறதை கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாமே, ஏன் இன்ட்ரஸ்ட் இல்லாம கொடுக்குறீங்க

பருத்தி வீரன் வசனம்
நானும் பாத்துகிட்டே இருக்கேன், பயபுள்ள ஒரு மெசேஜ் கூட அனுப்பாம ஓட்ட மொபைல வச்சிகிட்டு என்ன பண்ற! போ போ, வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா ரீசார்ஜ் பண்ணச்சொல்லி மெசேஜ் அனுப்பு. போ போ. சொல்றோம்ல

லவ் பண்ண LUCK வேணும்
பிசினஸ் பண்ண MONEY வேணும்
அரசியல் பண்ண தில் வேணும்
அன்பு காட்ட அம்மா வேணும்
எஸ்.எம்.எஸ் அனுப்பு என்னை மாதிரி நல்ல ஃப்ரண்ட் வேணும்

நொடிக்கணக்கில் மெளனம்
நிமிட கணக்கில் சிரிப்பு
மணிக்கணக்கில் அரட்டை
காலந்தோறும் இன்பம்
இதெல்லாம் நம் நட்பில் தான்

உயிர் பிரிவது ஒரு நொடி வலி. 
ஒரு நல்ல நண்பனின் மெளனம் ஒவ்வொரு  நொடியும் வலி.

அவளை நான் நேசிக்கவில்லை, சுவாசிக்கிறேன். வாழ்த்து சொல்ல அவள் என் வாழ்க்கையில் வந்தவள் இல்லை
வாழ்க்கையை தந்தவள்.  அவள் என் அன்னை.

கவலை இல்லாத மனிதர்கள் இருவர் மட்டுமே
ஒருவர் இறந்துவிட்டார், இன்னொருவர் இன்னும் பிறக்கவேயில்லை

நிலவுக்கும் ஒரு நாள் விடுமுறை உண்டு
ஆனால் என்னில் உன் நினைவுகளுக்கு என்றும் விடுமுறை இல்லை

நீ இல்லை என்றால் நான் இல்லை என்பது காதல்.
யார் இல்லையென்றாலும் உனக்காக நான் இருப்பேன் என்பது நட்பு

மனைவி: பக்கத்து வீட்டுக்காரி எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா?
கணவன்: 5 வருசத்துல இப்பதான் என்னோட செலக்ஷன் நல்லாருக்குன்னு சொல்லியிருக்க

எத்தனை நாட்கள் சந்தித்தோம் என்பதை விட எப்போது சந்திப்போம் என்று இதயம் துடிப்பதே உண்மையான நட்பு

அன்புடன் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட, உரிமையோடு பேசும் ஒரு வார்த்தையில் இருப்பதுதான் உண்மையான அன்பு

பிரிவு என்பது யாராலும் மறுக்க முடியாத வலி. நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரி இப்போதைக்கு அவ்வளவுதான். விரைவில் அடுத்த தொகுப்போடு வருவேன்.

3 comments:

butterfly Surya said...

நல்லாயிருக்கு.

வாழ்த்துக்கள்..

நிறைய எழுதவும்.

நன்றி..

rameshbabublogger said...

நன்றி நண்பரே.

Tech Shankar said...

/கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாமே, ஏன் இன்ட்ரஸ்ட் இல்லாம கொடுக்குறீங்க

சூப்பர்