Wednesday, December 31, 2008

இன்றே இப்படம் கடைசி


இது எந்த படத்தும் அடிக்கிற போஸ்டர் இல்லீங்க. இன்னும் சில மணி நேரங்களில் விடை பெற இருக்கும் 2008 ஆம் ஆண்டுக்கான போஸ்ட்(டர்).
நாட்டுல என்ன என்னவோ நடந்து முடிஞ்சிடுச்சி. அதே மாதிரி நம்ம வாழ்க்கையிலும் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்.





அடுத்த ஆண்டாவது நள்ள ஆண்டாக இருக்கனும், தொழில் நல்ல படியா நடக்கனும், நல்லா படிச்சி நிறைய மார்க் வாங்கனும், பங்குச்சந்தை முன்னேறனும், கிரிக்கெட்ல இந்தியா எல்லா தொடர்லையும் ஜெயிக்கனும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை வரக்கூடாது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருக்கனு, நம்ம கட்சி ஆட்சியை பிடிக்கனும், தலைவர் படம் ஹிட் ஆகனும், மழை பெய்தாலும் வெள்ளம் வராம இருக்கனும், வெள்ளம் வந்தாலும் நிவாரணம் விரைவா கிடைக்கனும், விலை வாசி குறையனும், தங்கம் விலை சரியனும், புதிசா வீடு கட்டணும், கார் வாங்கனும், பைக் வாங்கனும், நெக்லஸ் வாங்கனும், பாஸ் கிட்ட நல்ல பேர் வாங்கனும், அப்பா/வாத்தியார் கிட்ட அடி வாங்க இருக்கனும், கம்பெனில என்னோட டீம்ல நல்ல அழகான பொண்ணு வரனும், ஒரு தடவை அமெரிக்கா போய்ட்டு வந்திடனும், இந்த முறையாவது லவ் பண்ற பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணிடனும், ப்ளாக்ல நிறைய பதிவு போடனும், தம்/தண்ணி அடிக்கிறதை நிப்பாட்டனும், தினமும் குளிக்கனும், செலவை கம்மியாக்கனும், கிரெடிட் கார்டை தூக்கி எறியனும், லஞ்சம் வாங்கக்கூடாது, ........உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்படி எத்தனையோ ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் பலரது மனதில் இருக்கும். நல்லவை நல்லபடியா நடக்கனும், சந்தோஷம் பெருகனும், செல்வம் கொழிக்கனும், வெற்றி கிடைக்கனும், புத்தாண்டு எல்லாருக்கும் நல்ல படியாக இருக்கனும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Sunday, December 28, 2008

முதல் மிஸ் இந்தியா

நம் நாட்டின் முதல் மிஸ் இந்தியா யாருன்னு யாருக்காவது தெரியுமா? இப்ப தெரிஞ்சிக்கோங்க.
1947 ஆகஸ்டு மாதம் முதல் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரமிளா (அ) எஸ்தர் ஆப்ரகாம் என்பவர்தான். இவர் பல திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

அன்றும் இன்றும் பிரமிளா.

அன்று






இன்று 2006



உபயம் : Rediff

Saturday, December 27, 2008

டிராபிக் விதிகளும் அபராதமும்

     
Sr.No. Description of Offences Motor Vehicle Act SectionsCompounding Fee(In Rs)
1Parking in 'No Parking' Zone. MVA - 119/177100
2MVA - 119/177100
3Double Parking of Vehicle. MVA - 119/177100
4Vehicle entering in a 'No Entry' Zone. MVA - 119/177100
5No 'U' Turn. MVA - 119/177100
6Obstruction to other vehicle or Pedestrians. MVA- 122/177100
7Driving on the wrong side. MVA- 119/177 100
8Overtaking a vehicle from left side. MVA-119/177 100
9Disobeying traffic signs or signals. MVA-119/177100
10Carrying passenger on footboard. MVA-123/177100
11Licence not in possession. MVA-130/177100
12Owner not giving information about his / her driving License. MVA- 133/177 100
13Using unsafe vehicle. MVA- 190(1)/177 100
14Driving under influence of Alcohol. MVA- 185(1)Non Compoundable
15Driving two wheeler without a Helmet MVA- 129/177 100
16Carrying passengers on Bonnet/Cabin/running Board. MVA- 123(2)/177100
17Driving without Licence. MVA- 3(1)/181300
18Giving vehicle to a person who has no driving licence. MVA- 5/180300
19Rash Driving. MVA- 184500
20Underage person (below 18 Yrs of age) driving geared vehicle. MVA- 4(1)/181300
21Underage person (below 16 Yrs of age) driving non- geared vehicle. MVA- 4(1)/181300
22Speeding or Lane cutting. MVA- 112/183200
23Driving or giving out for use uninsured vehicle. MVA- 146/196300
24Triple seat driving. MVA-128100
25Driving or giving out for use unregistered vehicle. MVA- 39/1921000
26Unauthorised transport of passengers or goods without valid permit. MVA- 66(1)/192Non Compoundable
27Ignoring Traffic Officer's Signal. MVA- 132(1)a/179200
28 Parking Rickshaw/Taxi not in an Authorised Rickshaw Stand. MMVR-21(5)/17750
29Demanding excess Auto / Taxi meter charges. MMVR- 21(12)/17750
30Auto or Taxi driver refusing to carry passenger(s) to nearby destination. MMVR- 22(d)/17750
31Demanding Auto / Taxi fare beyond the Meter Charges applicable. MMVR-21(d)/17750
32Dazzling/Glaring Light. MMVR- 235/177100
33Illegal/Fancy Number Plate. MMVR- 235(2)/177100
34Parking On Footpath. MMVR- 237(1)/177100
35Auto / Taxi driver deliberately not taking the shortest route to a passenger's destination. MMVR- 21(8)/17750
36Auto / Taxi drivers soliciting passengers. MMVR-21(13)/17750
37Auto / Taxi driver smoking while driving. MMVR- 21(16)/17750
37Auto / Taxi driver not in uniform while driving. MMVR- 31(1)/17750
38Carrying persons or articles causing obstruction to the driver's seat. MMVR- 23(1)/17750
39Blowing horn in a Silence Zone. MMVR- 231/177100
40Driving Auto/Taxi without valid badge. MMVR- 24(2)/17750
41Carrying Goods of more than 12 feet in height. MMVR- 229/177100
42Driving heavy vehicle with Back Door or Latch Open. MMVR- 229(2)/177100
43Not having Light on Number Plate MMVR- 236(1)/177100
44Negligence while reversing your vehicle. MMVR- 233/177100
45Filling of less petrol by Taxi/Auto driver while carrying passenger(s). MMVR- 21(14)/17750
46Not keeping Auto / Taxi Clean. MMVR- 21(29)/17750
47Carrying excess passengers in Auto/Taxi... MMVR- 21(20)/17750
48Not having side or rear view mirror. MMVR- 161/177100
49Keeping TV set or Video on Dash Board. MMVR- 162/177100
50Using mobile phone while driving. MMVR- 250(a)/177100
51Stopping on Zebra crossing. MMVR- 237(1)/177100
52Driving without Mud Guard. MMVR- 165/177100
53Driving without wiper in rainy season (3/4 Wheelers). CMVR-101/177100
54Driving with worn out or torn tyres. CMVR-94(2)/177100
55Driving without reflector light. CMVR-104(1)/177100
56No Head/Tail Lamps. CMVR- 105/177100
57Vehicle stopping without flashing parking light at night. CMVR- 109/177100
58Blowing or installing of Pressure/Multisound Horn. CMVR -119(2)/190(2)MVA500
59Dark tinted glasses (less than 75% Visibility from outside). CMVR-100/177100
60Not displaying 'L' Board (Front & Rear) incase of learner's License. CMVR- 3(c)/177100
61Offence under Emission Control Act. CMVR-115(2)/190(2)MVA500
62Parking on wrong side. RRR-15(2)(1)/177100
63Parking or stopping within 10 mtrs of a Bus Stop. RRR-15(2)(1)/177100
64Stopping on a Bridge. RRR-15(2)(1)/177100
65Stopping within an Island. RRR-15(2)(1)/177100
66Driving on wrong side. RRR-15(2)(1)/177100
67Lane Cutting while driving. RRR-18(2)/177100
68Ignoring rules of Road Marking or Lane Marking. RRR-18(2)/177100
69Parking in front of a Gate. RRR-15(2)(8)/177100

Friday, December 26, 2008

Tuesday, December 23, 2008

பழமையான முதல் 100 டாட்காம் தளங்கள் - பட்டியல்

வளர்ந்து வரும் நாடுகளில் இன்டர்நெட் வசதி இல்லாத நகரம் என்று இல்லையென்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கிறது. ஒரு காலத்தில்(ரொம்ப இல்லீங்க 10 வருசத்துக்கு முன்னாடி வச்சிக்கோங்க) பெரிய நிறுவனங்கள் மட்டுமே இணைய வசதி, தன்க்கென்று இணையதளங்களை வைத்திருந்தன. ஆனால் இந்த 10 ஆண்டுகளில் தனி நபர் ஒருவரும் தனக்கென்று இணையதளம் அப்படி இல்லையென்றால் வலைப்பூ வைத்திருக்கும் அளவுக்கு வசதிகள், தொழில்நுட்பம் முன்னேறி விட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் ரீவைண்ட் செய்தால் இன்டர்நெட்டின் ஆரம்ப காலத்து செல்ல முடியும். பெரிய நிறுவனங்கள் அப்போது தான் தோன்றத்துவங்கிய காலம். புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகம், புதிய புரோகிராம் அறிமுகம் என்று பல்வேறு பெரிய நிறுவனங்கள் தங்களை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்திய காலம். MS Dos, Turbo C என்று புதிது புதிதாக டெக்னிக்கல் வார்த்தைகள் வெளிவந்தன. அதே காலகட்டத்தில் தான் இன்டர்நெட் வசதியும் ஏற்படத்தொடங்கியது.

சரி யார் முதன் முதலில் தனக்கென்று புதிய இணையதளம் தொடங்கினார்கள் என்று பார்ப்போம். இப்போது இருக்கும் ஜாம்பவான்களான யாஹூ, கூகுள் போன்ற நிறுவனங்கள் எல்லாம் அப்போது இணையதளங்களை தனக்கென்று உருவாக்கவில்லை. முதன் முதல் அறிமுகமான இணையதளம் symbolics.com. 1985 ஆம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இந்த இணையத்தளம் அறிமுகமானது. கணினி தயாரிக்கும் நிறுவனம் இந்த தளத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த நிறுவனம் 90களில் திவால் ஆனது. ஆனாலும் பல புதிய உரிமையாளர்களால் தொடர்ந்து இயங்கி வருகிறது. உலகின் முதல் இணையதளம் என்ற பெருமையையும் தொடர்ந்து இயங்கிவரும் பெருமையையும் இது பெற்றுள்ளது. இதன் பிறகு பெரிய நிறுவனங்களான ஹச்.பி, ஐபிஎம், ஏடி&டி, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் இணையதளம் உருவாக்கின. மைக்ரோசாப்ட் நிறுவனமே 1991 ஆம் ஆண்டு தான் தனக்கென்று இணையதளம் உருவாக்கியது. யாஹூ நிறுவனம் 1995ல் தனது இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. 1997ல் கூகுள் தனது தளத்தை உருவாக்கியது. இன்று கணக்கில் அடங்கா இணையதளங்கள் பல உருவாகி உள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் பல லட்சம் கோடிகளை இணையதள எண்ணிக்கை தாண்டும் என்றும் கருத்து நிலவுகிறது.
சரி இனி முதன் முதலில் உருவாக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலைப்பார்ப்போம்


1. symbolics.com: மார்ச் 15, 1985
2. bbn.com: ஏப்ரல் 24, 1985
3. think.com: மே 24, 1985
4. mcc.com: ஜீலை 11, 1985
5. dec.com: செப்டம்பர் 30, 1985
6. northrop.com: நவம்பர் 7, 1985
7. xerox.com: ஜனவரி 9, 1986
8. sri.com: ஜனவரி 17, 1986
9. hp.com: மார்ச் 3, 1986
10. bellcore.com: மார்ச் 5, 1986
11. ibm.com: மார்ச் 19, 1986
12. sun.com: மார்ச் 19, 1986
13. intel.com: மார்ச் 25, 1986
14. ti.com: மார்ச் 25, 1986
15. att.com: ஏப்ரல் 25, 1986
16. gmr.com: மே 8, 1986
17. tek.com: மே 8, 1986
18. fmc.com: ஜீலை 10, 1986
19. ub.com: ஜீலை 10, 1986
20. bell-atl.com: ஆகஸ்டு 5, 1986
21. ge.com: ஆகஸ்டு 5, 1986
22. grebyn.com: ஆகஸ்டு 5, 1986
23. isc.com: ஆகஸ்டு 5, 1986
24. nsc.com: ஆகஸ்டு 5, 1986
25. stargate.com: ஆகஸ்டு 5, 1986
26. boeing.com: செப்டம்பர் 2, 1986
27. itcorp.com: செப்டம்பர் 18, 1986
28. siemens.com: செப்டம்பர் 29, 1986
29. pyramid.com: அக்டோபர் 18, 1986
30. alphacdc.com: அக்டோபர் 27, 1986
31. bdm.com: அக்டோபர் 27, 1986
32. fluke.com: அக்டோபர் 27, 1986
33. inmet.com: அக்டோபர் 27, 1986
34. kesmai.com: அக்டோபர் 27, 1986
35. mentor.com: அக்டோபர் 27, 1986
36. nec.com: அக்டோபர் 27, 1986
37. ray.com: அக்டோபர் 27, 1986
38. rosemount.com: அக்டோபர் 27, 1986
39. vortex.com: அக்டோபர் 27, 1986
40. alcoa.com: நவம்பர் 5, 1986
41. gte.com: நவம்பர் 5, 1986
42. adobe.com: நவம்பர் 17, 1986
43. amd.com: நவம்பர் 17, 1986
44. das.com: நவம்பர் 17, 1986
45. data-io.com: நவம்பர் 17, 1986
46. octopus.com: நவம்பர் 17, 1986
47. portal.com: நவம்பர் 17, 1986
48. teltone.com: நவம்பர் 17, 1986
49. 3com.com: டிசம்பர் 11, 1986
50. amdahl.com: டிசம்பர் 11, 1986
51. ccur.com: டிசம்பர் 11, 1986
52. ci.com: டிசம்பர் 11, 1986
53. convergent.com: டிசம்பர் 11, 1986
54. dg.com: டிசம்பர் 11, 1986
55. peregrine.com: டிசம்பர் 11, 1986
56. quad.com: டிசம்பர் 11, 1986
57. sq.com: டிசம்பர் 11, 1986
58. tandy.com: டிசம்பர் 11, 1986
59. tti.com: டிசம்பர் 11, 1986
60. unisys.com: டிசம்பர் 11, 1986
61. cgi.com: ஜனவரி 19, 1987
62. cts.com: ஜனவரி 19, 1987
63. spdcc.com: ஜனவரி 19, 1987
64. apple.com: பிப்ரவரி 19, 1987
65. nma.com: மார்ச் 4, 1987
66. prime.com: மார்ச் 4, 1987
67. philips.com: ஏப்ரல் 4, 1987
68. datacube.com: ஏப்ரல் 23, 1987
69. kai.com: ஏப்ரல் 23, 1987
70. tic.com: ஏப்ரல் 23, 1987
71. vine.com: ஏப்ரல் 23, 1987
72. ncr.com: ஏப்ரல் 30, 1987
73. cisco.com: மே 14, 1987
74. rdl.com: மே 14, 1987
75. slb.com: மே 20, 1987
76. parcplace.com: மே 27, 1987
77. utc.com: மே 27, 1987
78. ide.com: ஜீன் 26, 1987
79. trw.com: ஜீலை 9, 1987
80. unipress.com: ஜீலை 13, 1987
81. dupont.com: ஜீலை 27, 1987
82. lockheed.com: ஜீலை 27, 1987
83. rosetta.com: ஜீலை 28, 1987
84. toad.com: ஆகஸ்டு 18, 1987
85. quick.com: ஆகஸ்டு 31, 1987
86. allied.com: செப்டம்பர் 3, 1987
87. dsc.com: செப்டம்பர் 3, 1987
88. sco.com: செப்டம்பர் 3, 1987
89. gene.com: செப்டம்பர் 22, 1987
90. kccs.com: செப்டம்பர் 22, 1987
91. spectra.com: செப்டம்பர் 22, 1987
92. wlk.com: செப்டம்பர் 22, 1987
93. mentat.com: செப்டம்பர் 30, 1987
94. wyse.com: அக்டோபர் 14, 1987
95. cfg.com: நவம்பர் 2, 1987
96. marble.com: நவம்பர் 9, 1987
97. cayman.com: நவம்பர் 16, 1987
98. entity.com: நவம்பர் 16, 1987
99. ksr.com: நவம்பர் 24, 1987
100. nynexst.com: நவம்பர் 30, 1987


Monday, December 22, 2008

SMS பிரியர்களே வாங்க - ஆங்கிலம்

நண்பர்களே இன்றைய SMS தொகுப்பு ஆங்கிலத்தில் வந்த SMSகள். புடிச்சா மத்வங்களுக்கு தட்டி விடுங்க. இல்லைன்னா விட்டுவிடுங்க.

Don't focus on how to spend less money, focus on how to earn more many to spend - Ratan Tata

Hard work is like steps. Luck is like a lift. Lift may fail sometimes. But steps will always get u to the top

The hardest part of missing friends is not their absence, it is when u think of the good times and ask yourself, will it happen again!

Friendship is a language of hear. Not written on paper. Not given by pledge. Its a promise renewed everytime.

Hard work is like a cup of milk. Luck is just like a spoon of sugar. God always gives sugar to those who have a cup of milk.

If god gives me just one day to live. i will be with you for 23 hours. The next 1 hr, i will searchg the person who will care for u after me.

Delay is the enemy of efficiency. Waiting is the enemy of utilisation. So dont delay anything and dont wait for anything - Bill Gates

The depth of your concentration determines the quality of your work - Bagavad Geetha

Be strong in your decisions, either it gives victory or failure. But it will teach you a lesson whether to do or not to do.

Bye is a little word, that causes so much pain, for the person who love you a lot and miss you lot. So never say BYE always say MEET YOU AGAIN.

New friends may be a poem.But old friends are alphabets. Without alphabets there is no poem.

Assume you are sitting infront of computer. what computer will think you know? 
Intel Inside, mental outside. hahaha. its not over.
Assume you are standing infront of the fridge. What fridge will think of you?
Cool inside, fool outside.  Coooooooolllll

In India parents say "Study well my son, otherwise u wont get a job".
In America "Study well my son, otherwise any INdian will grab your job".

The future is not something we wait. It is something we should create. - Vivekanadar.

Possessiveness is a scale of love. There is no true love without possessiveness. So be possessive with your loved ones.

----------------------------
Thats all for now. Meet you soon with something new and more.



Saturday, December 20, 2008

மறக்காதீங்க - இன்று 21 டிசம்பர் போலியோ சொட்டு மருந்து


இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை தடுக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று 21ம்தேதி 67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு முகாம்களில் வழங்கபடுகிறது. அரசு மாநகராட்சி மருத்துவமனைகள், சத்துணவு கூடங்கள், சுற்றுலா மையங்கள், பஸ், ரயில், விமான நிலையங்கள், மெரினா கடற்கரை என 40 ஆயிரத்து 399 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். நடமாடும் பூத் மூலமாகவும் சொட்டு மருந்து வழங்கப்படும். சென்னையில் சொட்டு மருந்து முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார். 2வது கட்ட முகாம் பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.

Friday, December 19, 2008

SMS பிரியர்களே வாங்க - தமிழ்

நீண்ட நாட்களாக எனக்கு வந்த குறுந்தகவல்களை சேர்த்து வைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நல்லாருந்தா நீங்களும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தட்டிவிடுங்க. பழசு, புதுசு, கடி, ரொமான்ஸ் எல்லாமே இருக்கும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மேனேஜர்: எங்க பேங்க்ல இன்ட்ரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்
சர்தார்: கொடுக்குறதை கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாமே, ஏன் இன்ட்ரஸ்ட் இல்லாம கொடுக்குறீங்க

பருத்தி வீரன் வசனம்
நானும் பாத்துகிட்டே இருக்கேன், பயபுள்ள ஒரு மெசேஜ் கூட அனுப்பாம ஓட்ட மொபைல வச்சிகிட்டு என்ன பண்ற! போ போ, வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா ரீசார்ஜ் பண்ணச்சொல்லி மெசேஜ் அனுப்பு. போ போ. சொல்றோம்ல

லவ் பண்ண LUCK வேணும்
பிசினஸ் பண்ண MONEY வேணும்
அரசியல் பண்ண தில் வேணும்
அன்பு காட்ட அம்மா வேணும்
எஸ்.எம்.எஸ் அனுப்பு என்னை மாதிரி நல்ல ஃப்ரண்ட் வேணும்

நொடிக்கணக்கில் மெளனம்
நிமிட கணக்கில் சிரிப்பு
மணிக்கணக்கில் அரட்டை
காலந்தோறும் இன்பம்
இதெல்லாம் நம் நட்பில் தான்

உயிர் பிரிவது ஒரு நொடி வலி. 
ஒரு நல்ல நண்பனின் மெளனம் ஒவ்வொரு  நொடியும் வலி.

அவளை நான் நேசிக்கவில்லை, சுவாசிக்கிறேன். வாழ்த்து சொல்ல அவள் என் வாழ்க்கையில் வந்தவள் இல்லை
வாழ்க்கையை தந்தவள்.  அவள் என் அன்னை.

கவலை இல்லாத மனிதர்கள் இருவர் மட்டுமே
ஒருவர் இறந்துவிட்டார், இன்னொருவர் இன்னும் பிறக்கவேயில்லை

நிலவுக்கும் ஒரு நாள் விடுமுறை உண்டு
ஆனால் என்னில் உன் நினைவுகளுக்கு என்றும் விடுமுறை இல்லை

நீ இல்லை என்றால் நான் இல்லை என்பது காதல்.
யார் இல்லையென்றாலும் உனக்காக நான் இருப்பேன் என்பது நட்பு

மனைவி: பக்கத்து வீட்டுக்காரி எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா?
கணவன்: 5 வருசத்துல இப்பதான் என்னோட செலக்ஷன் நல்லாருக்குன்னு சொல்லியிருக்க

எத்தனை நாட்கள் சந்தித்தோம் என்பதை விட எப்போது சந்திப்போம் என்று இதயம் துடிப்பதே உண்மையான நட்பு

அன்புடன் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட, உரிமையோடு பேசும் ஒரு வார்த்தையில் இருப்பதுதான் உண்மையான அன்பு

பிரிவு என்பது யாராலும் மறுக்க முடியாத வலி. நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சரி இப்போதைக்கு அவ்வளவுதான். விரைவில் அடுத்த தொகுப்போடு வருவேன்.

Thursday, December 18, 2008

விண்டோஸ் அசூர் : அடுத்த தலைமுறைக்கான முகில் கணினி - பாகம் 2

மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி திரு.ஸ்டீவ் பால்மர், மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் தமிழாக்கம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

* Cloud Computingக்கான ஒரு புதிய தளம்

இக்கூட்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான விண்டோஸ் அஸ்யூர் (Windows Azure) பற்றி விவாதிக்கப்பட்டது. இதில், விண்டோஸ் அஸ்யூரானது, ஒரே நேரத்தில் கணினி, இணையத்தளம், அலைபேசி என மூன்றிலும் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஏற்ற மென்பொருளாகும். மேலும், விண்டோஸ்7, விண்டோஸ் சர்வர் 2008 ஆர் 2 என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த மென்பொருள் இயங்கும் வகையில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.
இதில், விண்டோஸ்7 என்பது தற்போது பயன்படுத்தப்படும் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு அடுத்த மாற்று ஆபரேட்டிங் சிஸ்டமாகும். இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தில், இப்போதுள்ள தகவல் பரிமாற்றத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கனவே வழக்கத்தில் உள்ள வேர்டு எக்ஸல் பவர்பாயின்ட் போன்றவற்றிலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டு, தகவல் பரிமாற்றத்துக்கு ஏற்ற வகையில் செய்யப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு, இப்போதுள்ள மைக்ரோசாப்ட் வேர்டுவில் உள்ள வார்த்தைகளை, இணையத்தளத்தில் இருந்தவாறே வெட்டவோ, நீக்கவோ, அதில் ஏதேனும் திருத்தங்களோ செய்ய முடியாது. ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருளில், இதுபோன்ற குறைபாடுகள் நீக்கப்பட்டு, தகவல் பரிமாற்றத்துக்கு ஏற்ற வகையில், மிகவும் சுலபமாக வார்த்தைகளை கத்தரித்து, நீக்கி, சேர்த்து என எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினியில் மட்டுமல்லாது, அலைபேசியில் இணையத்தளத்தைப் பயன்படுத்தும்போதும், இவ்வாறு செய்யலாம். அந்த வசதி, இந்த மென்பொருளில் செய்து தரப்பட்டுள்ளது.
விண்டோஸ் அஸ்யூர்ரானது, மென்பொருள் என உறுதியாகக் கூற முடியாது. அது ஒரு புதிய கண்டுபிடிப்பு. அவ்வளவுதான். எனவே, இதை வணிக ரீதியிலான அலுவலகங்கள், தங்கள் சர்வர் கணினியில் போட்டு பயன்படுத்த முடியாது. தற்போதைய வியாபார உலகில், தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமைபடுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய கண்டுபிடிப்பு. எனவே, இதை மற்ற இதர மென்பொருட்களைப் போல் அவ்வளவு எளிதாக சர்வர் கணினியில் போட்டு பயன்படுத்த முடியாது. அதே சமயம், ஒரு அலுவலகத்துக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் தேவையான தகவல் பரிமாற்றங்களை மேலும் எளிமையாக்கும் வகையில் இந்தக் கண்டுபிடிப்பு 100 சதவீதம் வெற்றிகரமாகச் செயல்படும் என்பதில் மட்டும் எள்ளளவும் சந்தேகமில்லை.

* மென்பொருள் மற்றும் அதற்க்கான சேவை
--------------------------------------------------------------------------------


பொதுவாகவே, எந்த ஒரு நிறுவனமும் மென்பொருள் தயாரித்து, சந்தைப்படுத்தியபின் அந்த மென்பொருள் மீதான சேவையைத் தொடர வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர் மத்தியில் அந்த மென்பொருளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில், விண்டோஸ் அஸ்யூர்க்கு கண்டிப்பாகச் சேவை என்பது 100 சதவீதம் நிச்சயம் உண்டு. மேலும், இந்தக் கண்டுபிடிப்பைச் சந்தைப்படுத்துதலுக்கு முன்னரே பல வகையிலும், பல கட்டத்திலும், ஏராளமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சேவை என்பது மென்பொருட்களைப் பொறுத்தவரை இணையத்தள ரீதியிலான சேவைகளைத்தான் குறிப்பிடுவர். அந்த வகையில், விண்டோஸ் அஸ்யூருக்கு இணையத்தள ரீதியிலான சேவைகள் கண்டிப்பாகச் செய்யப்படும். வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகள், உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். இந்தப் புதிய விண்டோஸ் அஸ்யூரை பயன்படுத்தும் நபர்கள் கண்டிப்பாக, இதுவரை இல்லாத ஒரு புதுவித அனுபவத்தைப் பெறுவது நிச்சயம். அந்த அளவுக்கு, இந்த புதிய மென்பொருளில் ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. குறிப்பாக, தகவல் பரிமாற்றத்துக்காக மட்டுமே ஏராளமான விஷயங்கள் இந்த மென்பொருளில் புகுத்தப்பட்டுள்ளன.
எனவே, இந்த புதிய மென்பொருளைப் பயன்படுத்தும் நபர்கள் கண்டிப்பாகப் புதிய தலைமுறை மென்பொருளைப் பயன்படுத்துகிறோம் என்ற அனுபவத்தைப் பெறுவது நிச்சயம் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

* தனியாள் கணினிகள் மேம்படுத்துதல்
--------------------------------------------------------------------------------


கிளவுட் கம்ப்யூட்டிங் என்பதே, ஒரே நேரத்தில் யார் வேண்டுமானாலும், எங்கிருந்தபடியும், தங்களுடைய கருத்தை, தகவலைப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான். மேலும், இதற்காக வேறு எந்தப் பிரத்யேகக் கருவியையும் தேடாமல், நம் கையிலேயே உள்ள சாதாரண அலைபேசியை வைத்தேகூட இணையத்தளத்தைப் பயன்படுத்தி தகவல்களை எளிதாகப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தகவல் பரிமாற்றத்தில் இதுநாள்வரை உள்ள கட்டுப்பாடுகளையும், கட்டமைப்புகளையும் உடைத்து, இன்னும் எளிமைப்படுத்துவதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தகவல் பரிமாற்ற உலகில் இனி கிளவுட் கம்ப்யூட்டிங்கும், அதற்குப் பெரிதும் உதவிடும் வகையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விண்டோஸ் அஸ்யூர் மென்பொருளும், அந்த மென்பொருளுக்குத் தேவையான ஆன்லைன் சேவைகளும், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. மேலும், பரந்து விரிந்த இந்த உலகை, ஏற்கனவே இணையத்தளம் என்ற ஒன்றின் மூலம், கணினி அளவுக்குச் சுருக்கி விட்டோம்.
இனி, அதை மேலும் சுருக்கி, கையடக்க அலைபேசியிலேயே நம் உலகைக் கொண்டு வந்து விடும் அளவுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங்கும், அதற்கு உதவிடும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட விண்டோஸ் அஸ்யூர் மென்பொருளும், மிகப்பெரிய அளவில் தகவல் பரிமாற்ற உலகில் புகுந்து விளையாடப் போகின்றன.

இனி, கணினி என்பது வெறும் தகவல்களைச் சேமிக்க வைக்க உதவும் ஒரு கருவியாகத்தான் பயன்படப் போகிறது. இணையத்தளத்தைப் பொறுத்தவரை, இனி கையடக்க அலைபேசியே போதும் என்ற நிலை இனி வந்து விடும். இதுதவிர, வழக்கமாக நாம் அலைபேசியைப் பயன்படுத்தும் காரியங்களுக்கும் எப்போதும் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து கணினி மென்பொருள் வல்லுநர்கள் சிலர் கூறுகையில், தகவல் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை, இனி கிளவுட் கம்ப்யூட்டிங்கையும், விண்டோஸ் அஸ்யூரையும் யாராலும் மறுக்க முடியாது. கையடக்க அலைபேசி, கணினி மற்றும் இணையத்தளம் இம்மூன்றையும் ஒரே நேரத்தில் இணைக்க இனி பெரிதும் பயன்படப் போவது இவ்விரண்டும்தான். எனவே, இனி தகவல் பரிமாற்றத்துக்காக யாரும், எங்கும் அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியோ அல்லது அலுவலகத்தில் இருந்தபடியோ அல்லது வேறு எங்கேனும் இருந்தபடியோ மிகவும் எளிதாக தகவல்களைப் பெற முடியும். தகவல்களை அனுப்ப முடியும். அதுபோல், பெறப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும் முடியும்.

Source : Tamilvanigam

Wednesday, December 17, 2008

தமிழ்வணிகம் தளத்தின் கட்டுரைப்போட்டி

விஷூவல் மீடியா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் வணிகத் தகவல்களின் பெட்டகம் "தமிழ் வணிகம்" இணையத் தளம். வர்த்தகம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தங்கத் தமிழில் தடையில்லாமல் பரப்புவது எங்களின் முதன்மை நோக்கம். மென்பொருட்கள் உருவாக்கம், இணையத் தள வடிவமைப்பு, பயன்தரும் நட்புத் தளங்களைத் உலகளாவிய தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வது என "தமிழ் வணிகத்தின்" பணிகள் பரந்து விரிந்துள்ளன. இதோ இப்போது, மற்றொரு புதிய முயற்சியாக இப்போது கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது "தமிழ் வணிகம்".

முழு விவரங்களுக்கு இதை கிளிக்குங்க


Monday, December 15, 2008

விண்டோஸ் அசூர் : அடுத்த தலைமுறைக்கான முகில் கணினி - பாகம் 1

மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி திரு.ஸ்டீவ் பால்மர், மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் தமிழாக்கம் தமிழ் வணிகம் வாசகர்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது .

கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை அசுர வளர்ச்சியடைந்ததன் மூலம் உலகில் மிகப்பெரிய மாற்றங்கள், புரட்சிகள் ஏற்பட்டன எனலாம். இந்தப் புரட்சி மற்றும் மாற்றங்கள் வாயிலாக ஒருவரை மற்றொருவர் இப்படித்தான் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை மாறி, இப்படியும் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்த விஷயங்கள்தான் என்றில்லாமல், எல்லா விஷயங்களையும் இன்றைக்கு ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொண்டு தன் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அந்த அளவுக்கு இன்றைய சூழலில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இன்றைய தகவல் தொழில்நுட்பத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில், தகவல் கூறுபவரும் சரி, தகவல் பெறுபவரும் சரி, இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையும் மாறி, எந்த இடத்திற்கு சென்றாலும்  அந்த இடத்தில் இருந்து மற்றொருவரை தொடர்பு கொள்ளலாம் அல்லது...எந்த இடத்தில் இருந்தும் தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகளை, விஷயங்களைத் தெரிவிக்கலாம். அந்த அளவுக்கு இன்றைய தகவல் தொழில்நுட்பமானது இமாலய வளர்ச்சி பெற்றுள்ளது.
இத்துறையைப் பொறுத்தவரை, இன்று கண்டுபிடிக்கப்படும் ஒரு பொருள் நாளையே பழையதாகிவிடும். அந்த அளவுக்கு அசூர வளர்ச்சியில் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதோடு இத்துறையில் தினம் ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்து கொண்டுள்ளது. அப்படியே, இத்துறையில் தினம் ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்தாலும், ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு அப்படியே மக்கள் மனதில் நன்கு பதிந்து விடும். அம்மாதிரியான கண்டுபிடிப்புகளும் இத்துறையில் சாத்தியம். அந்த வகையில்      " Cloud Computing" என்ற கண்டுபிடிப்பைக் கூறலாம். இந்த முகில் கணினி இம்முறையின் மூலம், ஒரே நேரத்தில் இவ்வளவு பேர்தான் என்றில்லாமல், எவ்வளவு பேர் வேண்டுமானாலும் எங்கும் தொடர்புகொண்டு பேச முடியும். தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடியும்.

அதுபோல், பரிமாறிக் கொள்ளும் தகவல்களை கணினியில் சேமித்து வைப்பதும் சாத்தியம். அந்த அளவுக்கு " Cloud Computing"  கண்டுபிடிப்பில் ஏராளமான அனுகூலமான விஷயங்கள் உள்ளன.

ஆனால், இதுபோன்ற மாற்றங்கள், புரட்சிகள் அனைத்தும் வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. ஆனால், வீட்டிலுள்ள கணினியில் அவ்வளவு எளிதாகச் சாத்தியமாகாமல் போகிறதே? இந்தக் கேள்வி உள்பட, ஏராளமான கேள்விகளுக்கு விடை காணும் வகையில்  அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் Professional Developers Conference  என்ற கூட்டம் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், வீட்டில் உள்ள கணினிகளுக்கும் இதுபோன்ற பயனுள்ள சில கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய மென்பொருள் கண்டுபிடிப்புப் பற்றியும், அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் புதிய மென்பொருள், தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது பயன்படுத்தப்படும் கண்டுபிடிப்புகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கணினி வல்லுநர்கள் சிலர் கூறுகையில், இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரில், இ&மெயிலுக்காக பயன்படுத்துவோரின் எண்ணிக்கைதான் அதிகம்.

இதற்காக, தனியே கணினியின் உதவி தேவைப்படுகிறது. என்னதான், கையடக்க அலைபேசியிலேயே (மொபைல்போன்) இணையத்தளத்தை பார்க்கும் வசதி இருந்தாலும், அதிலும் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு சில விலை உயர்ந்த அலைபேசியில் மட்டும்தான் எவ்வித சிரமமும் இன்றி இணையத்தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விலையுயர்ந்த அலைபேசியை வாங்கிப் பயன்படுத்துவது என்பது அனைவராலும் சாத்தியப்படாது. எனவே, சாதாரண பாமர மக்களும் கணினி மட்டுமல்லாது தங்களிடம் இருக்கும் அலைபேசி உள்ளிட்ட எந்தத் தகவல் தொழில்நுட்பக் கருவியிலேயே இணையத்தளம் மூலம் தகவல் பரிமாற்றத்தைச் செய்து கொள்ளும் வகையில் புதிய மென்பொருள் தயாரிக்கப்பட வேண்டும்....கண்டுபிடிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது, என்றனர்.

Wednesday, December 10, 2008

தமிழ் SPELL CHECK மென்பொருள் - தமிழில் ஒர் புதிய அத்தியாயம்

இன்று தமிழில் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள் (இ-கலப்பை, NHM , மற்றும் கீமேன்)  போன்ற மென்பொருட்கள் இருந்தாலும் அச்சுத்துறைக்கு ஏற்ற ஒரு மென்பொருளாக இதுவரை ஸ்ரீலிபி மற்றும் அனு போன்ற மென்பொருட்களை நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் புதிய மென்பொருளை சர்மா ப்ராடக்ஸ் மற்றும் சொல்யூசன்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள விசைத்தமிழ் எனும் மென்பொருள் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற ஒரு மென்பொருளாகவே இருக்கிறது. அந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு பார்வை!

விசைத்தமிழ்
எந்த ஃபான்ட் லும், எல்லா தட்டச்சு முறைகளிலும்  தமிழில் தட்டச்சு செய்ய என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள்

விசைத்தமிழ் என்ற மென்பொருள் மூலம் நமது கணினியில் தமிழில் தட்டச்சு செய்யலாம் உங்களுக்கு தெரிந்த உள்ளீட்டு முறையில், உதாரணத்திற்கு நீங்கள் செந்தமிழ் பாண்ட்களை பயன்படுத்தினால் அந்த செந்திமிழ் பாண்ட் ஐ பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த டைப்-ரேட்டர் , தமிலிங்கிஸ் முறை போன்று 12 வகையான முறையில் பேஜ்மேக்கர், வேர்டு, அடோப் இன்டிசைன், உட்பட எல்லா மென்பொருள்களிலும் தட்டச்சு செய்யமுடியும்.

அதோடு விண்டோஸ் XP,  முதல் விண்டோஸ்  விஸ்டா  வரை windows - ன் எல்லா ஆபரேட்டிங் சிஸ்டம்களிலும் இயங்கும்.

தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக் குடும்பங்களும், 10-ற்கும் மேற்பட்ட விசைபலகை வகைகளும் உள்ளன.இவை எல்லாவற்றிலும் இயங்கூடிய வகையில் இந்த மெனபொருட்கள் வந்துள்ளது குறிப்பிட்டத் தக்கது

இந்த மென்பொருட்களோடு உடன் வரும் துணை மென்பொருட்கள்


ஸ்பெல் செக் : தமிழில் முதன்முறையாக 23 இலட்சம் வார்த்தைகளை உள்ளடக்கிய தமிழ் Sell Checker , விசைத்தமிழ் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் எந்த மென்பொருளில் டைப் செய்தாலும் ஒவ்வொரு வார்த்தையினையும் சொற்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை கண்டறிந்து அதற்கான சரியான வார்த்தையை உடனே காண்பிக்கும் அதிவேக Sell Checker இம் மென்பொருளில் உள்ளது.

ஆட்டோ கரெக்ட் : தமிழில் இதுவரை  வந்துள்ள எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கபட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. Ms-Word ன் Spell check போன்று

"ஃபான்ட் சாம்ப்ளர்" : ஒரே நேரத்தில் பல்வேறு ஃபான்ட்களில் வரும் எழுத்துருவை ஃப்ரிவீயூ காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்.

தமிழ் - ஆங்கிலம் அகராதி (டிக்ச்னரி) : இதில் ஏறத்தாழ 60,000 ஆங்கில வார்த்தைகளுக்கு 2,30,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலுருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். யுனிக்கோடிலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விசைத்தமிழ் கொண்டுள்ளது.

Font Analyzer : ஃபான்ட் பகுப்பாய்வு மென்பொருள்

இந்த மென்பொருளின் மூலம் நமக்கு வந்திருக்கும் ஃபான்ட் எந்த முறையில் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் முறைக்கு மாற்றிவிடலாம்.
உதாரணத்திற்கு  வானவில் ஃபான்ட் பயன்படுத்துபவர்கள் பாமினி ஃபான்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி 117 வகையான ஃபான்ட்களிலிருந்து நமக்கு வேண்டும் ஃபான்ட்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
(உம்)
இளங்கோ <-> வானவில், இளங்கோ <-> யுனிகோடு , டாம்  <-> யுனிகோடு, போன்று எந்த ஃபான்ட் முறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

Tamil Sorting : அகர வரிசைப்படுத்துதல்

ஆங்கில மென்பொருட்களில் உள்ள அகர வரிசைப்படுத்துதல் போன்று தமிழில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்து முறைகளிலும் நீங்கள் அகர வரிசைப்படுத்தி வைக்கலாம்.

இந்த மென்பொருளை தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற ட்ரான்ஸ்லிட்ரேஷன் விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், யுனிக்கோடிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு www.tamil.sarma.co.in

Source: Tamilvanigam


Monday, December 8, 2008

நானும் என் கேமராவும் - பாகம் 6

என்னுடைய கேமரா ஒரு கல்யாண வீட்டில் வைத்து திருடு போய்விட்டது. இப்பொழுது கேமரா இல்லாமல் சும்மாவே இருக்க முடியவில்லை. நண்பர்களுடன் பொள்ளாச்சி, டாப்ஸ்லிப் போன்ற இடங்களுக்கு சென்று வந்த போது கேமரா இல்லாமல் புகைப்படம் எடுக்க முடியாமல் மிகவும் வருத்தமாக இருந்தது. இருந்தும் எனது மொபைலில் கிளிக்கிய புகைப்படங்கள் சில









இன்டெல்-ன் அதிநவீன ப்ராசசர் Core i7


கணினி என்றாலே நமக்கெல்லாம் ஆச்சர்யம்தான் வரும்? ஏனெனில் முழுவதும் இயந்திரங்களை கொண்டு அவைகளை கட்டுப்படுத்தி

மென்பொருள் எனப்படும் நிரலாக்கங்களை கொண்டு தேவையான போது மட்டும் மின்சாரத்தினை பெற்று இயங்குகின்றன. 0,1, ஆமாம், இல்லை என்ற இரு வார்த்தைகளை மட்டுமே தன் அகராதியாக வைத்துள்ள கணினி ஓர் மனிதன் போன்று அசாதாரணமாக கணக்கு, மனிதனின் தேவைகளை பூர்த்திச் செய்யக்கூடிய ரோபோ என அனைத்திலும் 0, 1 என்ற இரண்டு வார்த்தைகள்தான். ஆனால் அவைகளை வைத்து இன்று மனிதன் நமது அண்டவெளியின் எல்லையினையும் அறிய முயற்சி செய்து வருகிறான்.

இதற்கெல்லாம் ஓர் அத்தியாவசியமானது.


கணினியில் உள்ள ஃப்ராசசர்கள்தான். ஏன் அப்படி? நமக்கு முழு உடம்பு இருந்தாலும் அவற்றின் வேலைகளை நரம்புகளை கொண்டு மேலாண்மை செய்வது மூளைதான். அதே போலதான் மதர்போர்டும், ஃப்ராசசரும் இணைந்ததுதான் கணினி. எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த எந்த இடத்திலும் ஒரு ஃப்ராசசர் என்பது தேவையான ஒன்று. எனெனில் அது எந்த பயன்பாட்டுக்கு தேவை என்பதை மனதில் கொண்டு உருவாக்கப்படுபவை.சரி இது இங்கே எதற்கு என்கிறீர்களா?

உலகம் முழுவதும் கணினி நுகர்வோர் கணினியை வாங்க வேண்டும் என்றால் முதலில் கேட்பது இன்டெல் ப்ராண்டா? என்பதுதான். ஏனெனில் இன்று முழுமையான பயன்பாட்டில் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருப்பது இன்டெல் தயாரிப்புகளைத்தான். இன்டெல் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தனது தயாரிப்புகளை மேம்படுத்தி வெளியிட்டு வருகிறது .

ஆனால் தற்போது இன்டெல் நிறுவனம் இப்போதைய ப்ராசசர்களிலிருந்து வெளிவந்து புதிய தொழில்நுட்பத்துடன் intel core i 7 எனும் புதிய ஃப்ராசசர் - ஐ வெளியிட்டுள்ளது.

இந்த ப்ராசசரானது கணினியின் பயன்பாட்டை அதிகமாக பயன்படுத்தும் வீடியோ, ஆடியோ எடிட்டிங், விளையாட்டுக்களை தடையில்லாமல் இயக்கவும், மேலும் கணினியில் வேகத்தை குறைக்காமல் இயங்கும் வகையில் தனது புதிய ஃப்ராசசரை வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே எப்போது செயல்திறன் மேம்படுத்தப்பட்டாலும் அதற்கேற்றார்ப்போல் கணினியின் மின்சாரமும் அதிகமாகவே கணினி எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த நிலை மாறி கணினியின் செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில் புழக்கத்தில் இருக்கும் கணினிகள் எடுத்துக்கொள்ளும் மின்சார அளவை விட 40% குறைவாக எடுத்துக்கொண்டு இயங்குகிறது இந்த புதிய ஃப்ராசசர் intel core i 7.

அது மட்டுமல்ல முப்பரிமாணத் தொழில் நுட்பத்துடன் கூடிய செயல்களை core i7 ஃப்ராசசர்


கணிணியில் வழக்கத்தை விட 40 மடங்கு வேகத்தில் விரைவாக செய்து முடிக்க முடியும்.

இன்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழில்நுட்பங்களையும், வாடிக்கையாளர்களுக்கு செலவினை குறைக்கம் வகையிலும்


நாளைய தொழில் நுட்பத்தை இன்றே அறிமுகம் செய்து விட வேண்டும் என்ற துடிப்பில், மிகச் சிறப்பான அம்சங்களுடன் இந்தப் புதிய ஃப்ராசசர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்டெல் நிறுவனத்தின் தெற்காசிய வர்த்தக இயக்குனர் பிரகாஷ் பக்ரி தெரிவித்தார்.



இப்புதிய ஃப்ராசசரில் பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



டர்போ பூஸ்ட் தொழில்நுட்பம்

இன்டெல் நிறுவனம்

தனது தனித்தன்மை வாய்ந்த டர்போ பூஸ்ட் டெக்னாலஜி மூலம் கணினியின் செயல்திறனை அதிகப்படுத்தி நமது வேலைகளை மிக எளிதில் முடித்துவிடுகிறது. இந்த டர்போ பூஸ்டரானது ஒன்று அல்லது பல்வேறு செயலாக்கங்களுக்கு ஏற்றார்ப்போல் தானாகவே செயல்பட்டு கணினியை வெகு வேகமாக இயக்கிட வழி செய்கிறது.

ஹைப்பர் திரட்டிங் தொழில்நுட்பம் , ஸ்மார்ட் கேச் , இன்டெல் குயிக் பாத் இன்டர்கனெக்ட்,


உள்ளிணைந்த மெமரி கண்ட்ரோலர் , மற்றும் எச்டி பூஸ்டு போன்ற தொழில்நுட்பங்களை கொண்டுள்ள இந்திய புதிய ஃப்ராசசரானது அதிவேகமாக கணினியை இயக்குவோர்களின் விருப்ப தேர்வாக அமையும்.

இந்திய வாடிக்கையாளர்கள் Core I7 Processor பொருத்தப்பட்ட கணிணிகளை HCL, Wipro, Acer மற்றும் Dell நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும், இணைய வர்த்தகத்தின் மூலமாகவும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம். புதிய கணிணியின் மேலதிகச் சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இன்டெல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முகவரி
www.intel.com/pressroom

www.blogs.intel.com

Rain Rain Go Away




Source:Nattuboltu

Saturday, December 6, 2008

Rainy Day






It was funny to see when water started getting inside my home through sewage holes in kitchen and bathrooms. But when times pass on and when the water level keep increasing, tension starts mounting. It was almost 6 inches height of water inside when we slept that night. At around 3Am was shocked to see the level become almost 3 times more. It was most fainting experience i ever had in my life.