Tuesday, December 20, 2011

மின்சாரம் தயாரிக்க மாற்று வழிகள்

இந்த பதிவு கீற்று தளத்தில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரையின் ஒரு பகுதி. மின்சாரம் சிக்கனம் கடைபிடிப்பது, மின்சாரம் தயாரிக்க அணு உலைகளைத்தவிர மாற்று வழிகள் என்ன என்பது பற்றி கீற்று தளத்தில் வெளியாகியிருந்தது. அதோடு மேலும் சிலவற்றையும் சேர்த்திருக்கிறேன்.

கீற்று தளத்தில் வெளியான பதிவு காண‌




தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.

தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.

இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.


எத்தனையோ ஏடிஎம் களில் 24 மணி நேரமும் ஏசி ஓடிக்கொண்டே இருக்கின்றன. குளிர்காலங்களில் அவசியம் 24 மணி நேரமும் ஏசி தேவைதானா? இரவு நேரங்களில் சில மணி நேரங்கள் அவற்றை நிறுத்தி வைக்கலாம். அவ்வாறு செய்வது மூலமும் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

தமிழகம் முழுவதும் குண்டு பல்புகள் பயன்படுத்துவதற்கு தடைச்சட்டம் கொண்டு வரலாம். அனைத்து ஐடி நிறுவனங்களும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதை கட்டாயமாக்கலாம். அவர்களால் தயாரிக்க முடிகிறதோ இல்லையோ நிச்சயம் சிக்கனமாக இருக்க முன்வருவார்கள்.

1 comment:

Anonymous said...

ஆயிரம் வழியிருக்க அனுஉலை ன்னு தொங்குறாங்களே!