Monday, December 12, 2011

நானும் செப்டம்பர் 11ம்

செப்டம்பர் 11 அப்படின்னு சொன்னதும் உலகத்துல உள்ள எல்லாருக்கும் நியாபகம் வருவது அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் தான். என்னோட வாழ்க்கையிலையும் இந்த தேதி ரொம்ப முக்கியமானது. டெரர் இல்லீங்க சந்தோசமான விசயம் தான்.


கல்யாணமாகி 2007ல் வாடகை வீட்டுக்கு குடிபுகுந்தது செப்டம்பர் 11ம் தேதி தான். இது ஒரு சப்ப மேட்டருதான்னு வச்சிக்கோங்க. எல்லாருடைய வாழ்க்கையிலையும் நிறைய‌ கனவுகள் இருக்கும். அதுல ஒண்ணு, சொந்தமா வீடு வாங்குறது. வாடகை வீட்டுக்காரர்கள் தொல்லையில் இருந்து தப்பிச்சி சொந்த வீட்டுல எந்த தொந்தரவும் இல்லாம இருக்கனும் அப்படிங்கிறது தான் எல்லாருடைய ஆசையும். கல்யாணம் ஆகி 3வது வருசத்துல 3வது வாடகை வீட்டுக்கு மாறினேன். 


ஒரு வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்கு குடிபோகும் போது ஏற்படுற பிரச்சனைகள் என்னனு அதை அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். கொடுத்த அட்வான்ஸ்ல எதையும் குறைக்காம வீட்டு ஓனர் திருப்பி கொடுக்கிறது முதல் விசயம். ஒரு வீடு பார்க்கும் போது புரோக்கர் மூலமா பார்த்தா அவங்களுக்கு ஒருமாத வாடகை கமிஷன் அடுத்த விசயம். வீட்டுல் இருக்குற ஃப்ரிஜ், வாஷிங்மெசின், டீவி எல்லாத்தையும் பத்திரமா ஏத்தி பத்திரமா இறக்கி வைக்கிற பேக்கர்ஸ் & மூவர்ஸ் அடுத்த விசயம். முன்னாடி இருந்த வீட்டுக்கு பக்கத்துல இருந்த வசதிகள் புது வீட்டு பக்கத்துலையும் இருந்தால் தான் வசதியா இருக்கும். எங்களை மாதிரி அடிக்கடி ஊருக்கு போய்ட்டு வர்றவங்களுக்கு வீட்டுக்கு பக்கத்துலையே பஸ், ரயில்வே ஸ்டேஷன் வசதி எல்லாம் பார்க்கனும். வீட்டு ஓனர் திடிர்ன்னு வீடு வேணும் காலி பண்ணுங்கன்னு சொல்லாம இருக்கனும், இது ரொம்ப முக்கியமான விசயம். நமக்கு அலுவலகம் எங்க இருந்தாலும் பரவாயில்லை பிள்ளைங்களுக்கு ஸ்கூல் பக்கத்துல இருக்கனும்ங்கிறதும் முக்கியமான விசயம். 


இப்படியே பல விசயங்கள் பார்த்து பார்த்துதான் 90% பேர் வீடு மாறுவாங்க. 3 வருசத்துல 3வது வீடு மாறி வந்ததும் தான் யோசிக்க ஆரம்பிச்சோம். இனிமே அடுத்த வீடு மாறுவதா இருந்தால் அது சொந்த வீடாத்தான் இருக்கனும்னு. அதனால அதுக்கேத்த மாதிரி எல்லா ஏற்பாடுகளும் செய்ய ஆரம்பிச்சோம். வீடு வாங்குறதுங்கிறது சாதாரணமில்லையே. முதலில் முதல் வேண்டும். அதாங்க துட்டு துட்டு. லோன் போக 20% நம்ம கைகாசுல போடனும். இருக்கிற சேமிப்பு பணத்தையெல்லாம் எடுத்து, நகையெல்லாம் வித்து, நண்பர்கள் கிட்ட கடனை வாங்கி, சொந்தக்காரங்க கிட்ட கடனை வாங்கி, இப்படி எல்லா வழியையும் ஏற்பாடு பண்ணி 6 வருசம் பழைய வீட்டை வாங்கிட்டோம். 
ஒரு வழியா சொந்த வீடு வாங்கி பால் காய்ச்சிறதுக்கு நாளும் குறிச்சாச்சி அதுதாங்க செப்டம்பர் 11. ஹோமம் எல்லாம் செய்து நண்பர்கள் எல்லாரையும் வரவேற்று உபசரிச்சி அதே நாள் பறபறன்னு எல்லா பொருட்களையும் புது வீட்டுக்கு ஷ்ஃப்டும் பண்ணிட்டோம். புது வீட்டு கனவும் நனவாயிடுச்சி. இனி செப்டம்பர் 11 என்னோட வாழ்க்கையிலையும் முக்கியமான நாள்தான்.


என்னடா செப்டம்பர் முடிஞ்சி 3 மாசம் ஆயிடுச்சேன்னு பாக்குறீங்களா? இப்பத்தானே நெட் கனெக்ஷ்ன் கிடைச்சது. அதான் கொஞ்சம்!! லேட் ஆயிடுச்சி அப்டேட் பண்ண...ஹிஹி....

No comments: