பென் ட்ரைவ் கையில் வச்சிருந்தாலே வைரசும் கூடவே வரும்னு எல்லாருக்கும் தெரியும். பென் ட்ரைவில் வைரஸ் வராம இருக்க நம்ம கம்ப்யூட்டர்ஜீ ஒரு ஐடியா சொல்றார். கேட்டுக்கங்க
முதல்ல பென் ட்ரைவில் வைரஸ் எப்படி வரும்.?
பென் ட்ரைவில் வரும் வைரஸ் பைல்கள் எல்லாம் autorun.inf பைலை அடிப்படையாக வைத்தே வருகிறது. ஏனெனில் கணினியில் பென் ட்ரைவை உள்ளே நுழைத்தவுடன் தானாகவே பென் ட்ரைவ் இயங்க பென் ட்ரைவினுள் ஒரு autorun.inf என்ற பைல் உருவாகும். வைரஸ்களும் இந்த பைலை உருவாக்கும் திறன் பெற்றவை . இதன் மூலமாக வைரஸ்கள் பென் ட்ரைவில் உட்கார்ந்துகொண்டு நமக்கு டாடா காட்டும். பின் இதனை போக்க ஒவ்வொருமுறையும் பார்மெட்தான் அடிக்கணும் .ஒவ்வொரு முறையும் பார்மெட் அடிச்சா என்னாகிறது என்பதால் முதலில் ஆட்டோரன் க்கு ஒரு முற்றுபபுள்ளி வைப்போம்,.
வழிமுறை
பென் ட்ரைவை முதலில் பார்மெட் செய்துவிட்டு விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வழியா ஓபன் செய்யுங்கள்.
பின் இடது புறம் உள்ள ட்ரைவ்கள் பட்டியலில் பென் ட்ரைவிற்க்கான ட்ரைவை கிளிக் செய்து அதன் மீது மவுசின் வலது கிளிக் கொண்டு new folder என்று கொடுத்து அந்த போல்டருக்கு autorun.inf னு பெயர் தாங்க. இப்படி டம்மியா ஒரு போல்டர் உருவாக்கிக்கோங்க
இப்படி உருவாக்கினால் என்ன நன்மை?
பென் ட்ரைவ் கணியில் இணைத்தவுடன் கணினியானது அதனுள் autorun.inf என்ற பைலை உருவாக்க முயற்சிக்கும். அப்படி உருவாக்கினால் எப்படியாவது வைரஸ் வருவதற்கு வாய்ப்புண்டு. எனவேதான் அதே பெயரில் நாம் ஒரு டம்மி போல்டர் ஒன்றினை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
இப்படி பண்ணினா வைரஸ் ப்ரச்னை வராதான்னு கேட்டா விண்டோஸ் ஐ பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கோப்பில் ஒரே பெயரில் ஒரு போல்டரையும், பைல்களையும் அனுமதிக்காது. எனவே autorun.inf என்ற பெயரில் ஒரு போல்டரை கிரியேட் செய்து விட்டால் autorun.inf பைல் உருவாகாது. அதனால் வைரஸ் வரும் வாய்ப்பும் கம்மி.
அப்ப ஏற்கனவே இருந்தா என்ன பண்றது?
இதோ இங்கே இங்கே குறிப்பிட பட்டிருக்கும் வழிமுறைகளின் படி செய்யுங்க.
வைரஸ் போயே போச்சு................
http://www.drsafemode.com/2008/01/16/remove-thumdrive-virus/
சின்ன விஷயம்,, ஆனா பெரிய பாதுகாப்பு . விட்டா ஒட்டுமொத்த சிஸ்டத்துக்கும் பரவிடும்ல
கம்ப்யூட்டர்ஜூ அப்பப்ப வருவார் உங்களுக்கு உதவ......
No comments:
Post a Comment