மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சிஆர்ஆர்ஐ) டெல்லியில் உள்ள 12 முக்கிய சிக்னல்களில் இதுகுறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்நிறுவனத்தின் டிராபிக் மற்றும் போக்குவரத்துப் பிரிவு விஞ்ஞானி பூர்னிமா பரிதா கூறியிருப்பதாவது:
டெல்லியில் மொத்தம் 600 சிக்னல்கள் இயங்குகின்றன. இவற்றில் சிக்னல் போடப்படும் நிலையில், 98 சதவீத வாகன ஓட்டிகள் இன்ஜினை நிறுத்துவதே இல்லை. சிக்னலில் நிற்கும்போது இன்ஜின் இயங்குவதால் தினமும் 3.7 லட்சம் கிலோ எரிவாயு (சிஎன்ஜி), 1.3 லட்சம் லிட்டர் டீசல், 4.1 லட்சம் லிட்டர் பெட்ரோல் வீணாகிறது. இதன்படி பார்த்தால், நாள் ஒன்றுக்கு ரூ.2.72 கோடி மதிப்புள்ள எரிபொருள் வீணாகிறது. ஆண்டுக்கு கணக்கிட்டால் இது ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது.
ஒவ்வொரு நாளும் 950 புதிய வாகனங்கள் கூடுதலாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்த இழப்பு மேலும் அதிகரிக்கும் என்றார்.
சிக்னலில் இப்போது நேரமும் குறிப்பிடப்படுவதால் பச்சை சிக்னல் விழுவதற்கு 14 வினாடிகளுக்கு மேல் இருந்தால் என்ஜினை நிறுத்துவதன் மூலம் எரிபொருளை கணிசமாக சிக்கனம் செய்ய முடியும்.
அன்னியன் படத்தில் வரும் விக்ரமின் வசனமான 5 காசு 5 பேர் 5 நாளைக்கு திருடினா தப்பா இல்லையா என்பார்? அதே போல்தான் இங்கேயும் ஒரு நாளைக்கு 5 பேர் சிக்னலில் 5 நாளைக்கு வண்டியில் நிற்காததால் ஆகும் பெட்ரோல் செலவு கிட்டத்ட்ட ஒரு 1/4 லிட்டர் இருக்கும். இப்படி நாள்தோறும் தினமும் எப்படியாவது ட்ராபிக்கில் பல லட்சக்கணக்கான லிட்டர் எரிபொருள்கள் தீர்ந்து போகின்றன.
எரிபொருள் சிக்கனம் தேவை இக்கணம்
இவை வெறும் வார்த்தைகள் அல்ல
No comments:
Post a Comment