Saturday, February 11, 2012

நானும் என் கேமராவும் - பாகம் 8

நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக DSLR கேமரா ஒன்றை வாங்கிவிட்டேன். Canon 1100D, Nikon  D3100 இதில் எதை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இதைவிட சிறந்ததாக வாங்கலாமே என்று  யோசித்து  Canon 550D வை வாங்க முடிவு செய்தேன். இத்தனை நாள் பட்ஜெட் காரணமாகவே கேமரா வாங்காமல் இருந்து வந்தேன். இறுதியாக பரவாயில்லை சமாளிக்கலாம் என்ற முடிவோடு கேமராவை வாங்கிவிட்டேன்.

எனது புது கேமராவின் சில கிளிக்குகள்




Saturday, February 4, 2012

.காம் 2 .இன்

இத்தனை நாட்களாக .காம் என்று இருந்துவ்ந்த எனது வலைப்பூ இப்போது .இன் ஆக மாறி விட்டது. சரியாக எப்பொழுதிருந்து இந்த மாற்றம் என்று தெரியவில்லை. நேற்று கூட இதை நான் கவனிக்கவில்லை. இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது.

Thursday, February 2, 2012

சட்டசபை காமெடி

குழாயடி சண்டை மாதிரி ஆகிடுச்சி. இந்த காமெடிய என்னனு சொல்றது?



இந்த சண்டையெல்லாம் பார்த்துகிட்டு இருந்த ஸ்டாலின் மனசுக்குள்ள நினைச்சிருப்பாரு "இந்த பையனுக்குள்ள என்னவோ இருந்திருக்கு பாரேன்"

Sunday, January 29, 2012

ஆஸி ஓபன் டென்னிஸ் 2012


2012ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் நிலை வீரரான நோவக் டிஜோகோவிக் மற்றும் இரண்டாம் நிலை வீரரான நடாலுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பான போட்டியில் டிஜோகோவிக் சேம்பியன் பட்டம் பெற்றார்.

முதல் செட்டே மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. முதல் செட்டை நடால் கைபற்றினார். இந்த சுற்று சுமார் 88 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டாவது செட்டில் நோவக்  டிஜோகோவிக் வெற்றி பெற்றார். இந்த செட் 66 நிமிடங்கள் நடைபெற்றது. மூன்றாம் செட்டை நோவக் எளிதில் கைப்பற்றினார். இதன் மூலம் நோவக் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. ஆனால் நான்காம் செட் மிகவும் கடுமையாக நடைபெற்றது. இந்த செட் 88 நிமிடங்கள் நீடித்தது. இதில் நடால் வெற்றி பெற்றதால் போட்டி மீண்டும் விறுவிறுப்பானது. ஜந்தாவது செட்டில் இருவரும் தலா 5 கேம் எடுத்திருந்த பொழுதில் நோவக் பிரேக் பாய்ண்ட் பெற்றார். அடுத்த கேமில் வெற்றில் பெற்று 5வது தன் வசம் செய்து சேம்பியன் பட்டம் பெற்றார்.

கிராண்ட்ஸலாம் இறுதி போட்டியில் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியாக இது அமைந்துள்ளது. மொத்தம் 5 மணி 53 நிமிடங்கள் போட்டி நடந்துள்ளது. இந்த வெற்றியோடு 5வது கிராண்ட்ஸலாம் பட்டத்தை நோவக் பெற்றார். ஆஸ்திரேலியா நேரப்படி இரவு சுமார் 1.45 மணிக்கு போட்டி முடிவுக்கு வந்தது. இருவருமே கடைசி வரை விட்டுக்கொடுக்கமலே விளையாடிவந்தனர். இறுதியில் நோவக் சேம்பியன் பட்டம் பெற்றார். இருவருக்கும் வாழ்த்துகள் சேரவேண்டும்.  செட் விவரம் 5-7 6-4 6-2 6-7 (5/7) 7-5 

Friday, January 27, 2012

First American - 3 & 8 Years - Testing, .NET - Salem

Click the image to view the original image