1 வருட தவத்திற்குப்பிறகு ரசிகர்களுக்கு 100ஆசியைக்கொடுத்திருக்கிறார் கிரிக்கெட் கடவுள் சச்சின். இந்த போட்டியில் அடிப்பார், அடுத்த போட்டியில் அடிப்பார், அடுத்த டூரில் அடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒருவருட இடைவேளையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுளுக்கு வாழ்த்துகள்.
இதற்குள் எத்தனையோ பேருக்கு சச்சின் மேல் கோபமும் அத்திரமும் வந்துவிட்டது. இந்த ஒரு வருடத்தில் இந்திய அணியில் அதிக ரன் எடுத்தவர்களில் சச்சினும் ஒருவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஒரு சதம் அடிக்கவில்லை என்பது மட்டுமே சிலருக்கு உறுத்தளாக இருந்து வந்தது. இனி எத்தனை பேர் சச்சினின் ஆட்டத்தை எதிர்பார்ப்பார்கள்? இனி ஒரு சீரியசில் சச்சின் அடிக்கவில்லை என்றாலும் சச்சினை அணியில் இருந்து தூக்க வேண்டும் என்று சொல்லும் கூட்டமும் இருக்கிறது இங்கே.
சச்சினின் 100வது சதத்தை ரசிகர்கள் நீண்ட நேரம் கொண்டாட முடியாமல் பங்களாதேசுடனான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. சச்சினின் சாதனைகளை முறியடிக்க இனி யாராவது வருவார்களா?
No comments:
Post a Comment