2012ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் நிலை வீரரான நோவக் டிஜோகோவிக் மற்றும் இரண்டாம் நிலை வீரரான நடாலுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பான போட்டியில் டிஜோகோவிக் சேம்பியன் பட்டம் பெற்றார்.
முதல் செட்டே மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. முதல் செட்டை நடால் கைபற்றினார். இந்த சுற்று சுமார் 88 நிமிடங்கள் நடைபெற்றது. இரண்டாவது செட்டில் நோவக் டிஜோகோவிக் வெற்றி பெற்றார். இந்த செட் 66 நிமிடங்கள் நடைபெற்றது. மூன்றாம் செட்டை நோவக் எளிதில் கைப்பற்றினார். இதன் மூலம் நோவக் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. ஆனால் நான்காம் செட் மிகவும் கடுமையாக நடைபெற்றது. இந்த செட் 88 நிமிடங்கள் நீடித்தது. இதில் நடால் வெற்றி பெற்றதால் போட்டி மீண்டும் விறுவிறுப்பானது. ஜந்தாவது செட்டில் இருவரும் தலா 5 கேம் எடுத்திருந்த பொழுதில் நோவக் பிரேக் பாய்ண்ட் பெற்றார். அடுத்த கேமில் வெற்றில் பெற்று 5வது தன் வசம் செய்து சேம்பியன் பட்டம் பெற்றார்.
கிராண்ட்ஸலாம் இறுதி போட்டியில் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியாக இது அமைந்துள்ளது. மொத்தம் 5 மணி 53 நிமிடங்கள் போட்டி நடந்துள்ளது. இந்த வெற்றியோடு 5வது கிராண்ட்ஸலாம் பட்டத்தை நோவக் பெற்றார். ஆஸ்திரேலியா நேரப்படி இரவு சுமார் 1.45 மணிக்கு போட்டி முடிவுக்கு வந்தது. இருவருமே கடைசி வரை விட்டுக்கொடுக்கமலே விளையாடிவந்தனர். இறுதியில் நோவக் சேம்பியன் பட்டம் பெற்றார். இருவருக்கும் வாழ்த்துகள் சேரவேண்டும். செட் விவரம் 5-7 6-4 6-2 6-7 (5/7) 7-5