கிரிக்கெட்டில் 3 ஓவரில் ஒருவர் சதமடிக்கமுடியுமா? அடித்திருக்கிறார் ஒரு ஜாம்பவான். அவர் யாரா இருக்கும்? உங்களால் யூகிக்க முடிகிறதா? அவரே தாங்க, டான் பிராட்மேன் தான் அந்த சாகச மனிதர். ஆனா இது உள்ளூர் போட்டியில் நிக்ழத்தப்பட்ட சாதனை. சரி இது எப்படி சாத்தியம் என்பது தானே உங்கள் கேள்வி. இதே விடை.
இப்ப இருக்கிற மாதிரி அப்போ ஒரு ஓவருக்கு 6 பந்துகள் கிடையாது, மொத்தம் 8 பந்துகள். இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட நேரம் 1931, நவம்பர் 2ம் தேதி. ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடந்த போட்டி இது.
சரி இப்போ எப்படி 100 ரன்கள் அடித்தார் என்று பார்ப்போம்
முதல் ஓவரை வீசியவர் பிளாக். இந்த ஓவரில் மொத்தம் 33 ரன்கள் (6,6,4,2,4,4,6,1), அடுத்த ஓவர் பேக்கர். இந்த ஓவரில் பிராட்மேன் அடித்தது மட்டும் 40 ரன்கள் (6,4,4,6,6,4,6,4) அடுத்து 3வது ஓவரை மீண்டும் பிளாக் வீசினார். இந்த ஓவரில் எடுக்கப்பட்ட ரன் 29 (1,6,6,1,1,4,4,6). இதில் பிராட்மேன் பார்ட்னர் அடித்த ரன்கள் 2. மிகச்சரியாக 100 ரன்களை 3 ஓவரில் பிராட்மேன் அடித்து முடித்தார்.
கிட்டத்தட்ட 20-20 போட்டியை விட சுவாரசியமா இருந்தது அவரோட பேட்டிங். பிராட்மேன் அவுட் ஆகும் போது எடுத்திருந்த ரன்கள் 256.
டெஸ்ட் போட்டியில பிராட்மேன் வைத்திருக்கும் சராசரியை மிஞ்ச இப்போதைக்கு ஒருத்தரும் இல்லை. அந்த இலக்கை எட்ட நிச்சயம் நீண்ட காலங்கள் ஆகலாம். பார்க்கலாம் யார் அந்த சாதனை சிகரத்தை எட்டிபிடிக்குறாங்கன்னு!
நன்றி: www.cricinfo.com
2 comments:
sooppar thagaval thala...
nijamthaanaa?
its true boss :-)
Post a Comment