Wednesday, June 10, 2009

என்னத்துக்கு எழுதுறோம்

மன்னிச்சிக்கோங்க.

என்னத்துக்குய்யா வலைப்பூவில் கிறுக்குறோம். வெட்டியா இருக்கோம், எதாவது செய்யனும். கழுதை ஓசியாத்தான இருக்கு, நமக்கு தோணுறதையெல்லாம் எழுதுவோம். யாரு கேட்கப்போறா, அப்படியே கேட்டாலும் நமக்கென்ன! திட்டுறவங்க திட்டட்டும், பாராட்டுறவங்க பாராட்டட்டும், சும்மா படிக்கிறவங்க பாத்துட்டு போகட்டும். அரசியல், சினிமா, பயனுள்ள தகவல், பொழுது போக்கு, பொக்கிஷம், சொந்தக்கதை, கவிதை, காப்பி அடிச்சது, மடலில் வந்ததை பதிவது இப்படி எத்தனையோ! ஒருவர் எழுவது மற்றவர்களுக்கு பிடித்து நண்பர்களாகவும், பிடிக்காமல் போய் எதிரிகளாகவும், அடிக்கடி படிக்க வருபவர்களும் உண்டு.

சரி முடிவா என்னதான் சொல்ல வர்ற அப்படின்னு நீங்க கேக்குறது புரியாமலா இருக்கு! நான் எதுவுமே சொல்லவரலை. பதிவு போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சி. மொக்கையா எதாவது பதிக்கலாம் அப்படின்னுத்தான் இது. மறுபடியும் வந்துட்டோம்ல அப்படின்னு சொல்றதுக்குத்தான் இந்த பதிவு.

மறுபடியும் மன்னிச்சிக்கோங்க.


No comments: