Thursday, March 5, 2009

தடங்கலுக்கு பின்


வணக்கம் நண்பர்களே. பல தடங்கள், வேலை, இணைய வசதி, தொல்லைகளுக்குப் பின்னர் மீண்டும் கிறுக்க வந்துவிட்டேன். விரைவில் உருப்படியாக! ஏதாவது முடிந்தால் பதிகிறேன். நீங்களும் முடிந்தால் படித்துவிட்டு போங்கள். 

இந்த 2 மாத காலகட்டத்தில் நம்மைச்சுற்றி எத்தனையோ துயரச்சம்பவங்கள், மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். பிப்ரவரி மாத இடையில் போலீஸ் மற்றும் வக்கீல்களுக்கு இடையே நடந்தேறிய கொடுரச்சம்பவம் உயர்நீதிமன்றத்திற்கு ஒரு கருப்பு நாளாக கருதப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்னர் லாகூரில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களை தீவிரவாதிகள் தாக்கியது, கிரிகெட் வரலாற்றில் கருப்பு நாளாக கருதப்படுகிறது. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் அச்சத்திற்கு உள்ளாக்கிய சம்பவமாக உள்ளது. 

சரி இனி அடுத்த பதிவுல சந்திப்போம்.

No comments: