இந்த முறையும் எல்லாம் கலந்த குறுந்தகவல் கலவைகள் உங்களுக்காக
பேசாத வார்த்தையை விட, பார்க்காத கண்களை விட, நினைத்துக்கொண்டிருக்கும் இதயத்திற்கு வலி அதிகம்
உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன், ஏன் தெரியுமா? உன்னை துடிக்க விட்டு வாழ எனக்கு விருப்பம் இல்லை. (கொஞ்சம் ஓவராத்தான் போயிடுச்சோ!)
உன் மனம் நோகும் போது சிரி. பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை. சார்லி சாப்ளின்
நண்பனுக்கும் அம்மாவுக்கும் என்ன வித்தியாசம். நண்பன்: கடவுள் கொடுத்த பரிசு. அம்மா: பரிசாக வந்த கடவுள்
அன்பில் நீங்க ஒரு பிரிட்டானியா
அறிவில் நீங்க பார்லிஜி
பொறுமையில் நீங்க மில்க் பிக்கிஸ்
வேகத்தில் நீங்க 50 50
பண்பில் நீங்க லிட்டில் ஹார்ட்ஸ்
மொத்தத்தில் நீங்க ஒரு பிஸ்கோத்து
ஆசிரியர்: அணுவின் அமைப்பை பற்றி கூறு.
மாணவன்: அனு வின் கண்ணம் ஆப்பிள். அவள் உதடு செர்ரி. மொத்தத்தில் அனு ஒரு சூப்பர் ஃபிகர்
ஜேம்ஸ் பாண்டு இந்தியர் ஒருவரை சந்திக்கிறார்.
பாண்டு: மை நேம் இஸ் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்
இந்தியன்: மை நேம் இஸ் நாயுடு, வெங்கட நாயுடு, சிவ வெங்கட நாயுடு, லட்சுமி நாராயண சிவ வெங்கட நாயுடு, சீனிவாசலு லட்சுமி நாராயண சிவ வெங்கட நாயுடு, ராஜ சேகர சீனிவாசலு லட்சுமி நாராயண சிவ வெங்கட நாயுடு
பாண்ட்: தெரியாம சொல்லிட்டேன் விட்ருப்பா.
அவள் கோவிலை சுற்றினால் பக்தியோடு, நான் அவளை சுற்றினேன் காதலோடு, அவள் அப்பன் என்னை சுற்றினான் அருவாளோடு.
மெளனம் என்ற மொழியின் விளைவுகள்.
இன்பமான நேரத்தில் மெளனம் சம்மதம். நேசத்தவர்கள் பிரியும் போது மெளனம் சித்திரவதை. காதலில் மெளனம் துன்பம். தோல்வியில் மெளனம் சாதனை படி. வெற்றியில் மெளனம் அடக்கம். இறுதியில் மெளனம் மரணம்.
தீவிரவாதிகளை மன்னிப்பதோ, தண்டிப்பதோ கடவுளின் முடிவு. அவர்களை கடவுளிடன் அனுப்பும் வேலையை மட்டும் நாங்கள் செய்கிறோம். இந்தியன் ஆர்மி