தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு- மீட்பு பணித்துறை சார்பில் பட்டாசு தீ விபத்துக்களை தடுக்கும் விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் வாகனங்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது.
துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
- ராக்கெட், வாணம் மற்றும் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்களை குடிசைகள் அருகில் வெடிக்க வேண்டாம்
- மின்சார டிரான்ஸ்பார்மர்கள், பெட்ரோல் பங்குகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மார்க்கெட் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்
- குழந்தைகள் கையில் பட்டாசுகளை கொடுத்து வெடிக்க செய்யக்கூடாது
- பட்டாசுகள் வெடிக்கும்போது நைலான், சில்க் போன்ற துணிகளை அணியாமல் பருத்தியினால் ஆன துணிகளை அணிந்து கொள்வது நல்லது
- வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கையில் எடுக்கக்கூடாது
- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலை 6மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
- குடியிருப்புகள் மற்றும் மரங்கள் நிறைந்த இடத்தில் ராக்கெட் விடுவது தவிர்க்கப்பட வேண்டும். பரந்த மைதானத்தில் மட்டுமே ராக்கெட் விடவேண்டும்
- பட்டாசு கடைகள், கேஸ் கிடங்குகள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் அருகில் ராக்கெட் விடுவது தவிர்க்கப்பட வேண்டும்
- பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும்
- லாரிகளில் பட்டாசுகள் எடுத்து செல்லும்போது அதிக உயரத்துக்கு ஏற்றாமல், கேபின் உயரத்துக்கு மட்டும் ஏற்றி தார்பாலின் கொண்டு மூடி எடுத்துச்செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment