பிரபல அஜின்கோர்ட் யுத்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? கி.பி. 1415ம் ஆண்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த அந்த அஜின்கோர்ட் போரில் பிரெஞ்சு கை ஓங்கிவந்த நேரம்..
பிரெஞ்சு தளபதிகள் ஒரு விபரீத திட்டம் தீட்டினார்கள்.. தங்களிடம் போர்க்கைதியாக பிடிபடும் வெள்ளை வீரர்களின் நடுவிரலை மட்டும் வெட்டிவிடுவது என்பதே அது..! அந்தக்காலங்களில் வில்லில் நாண் ஏற்றி அம்பு எய்வதற்கு நடுவிரல் மிக அவசியமானதாக இருந்தது. அந்த விரலை அகற்றிவிட்டால், எதிரிகள் பயனற்றுப் போய்விடுவார்கள் என்பது பிரெஞ்சுக்காரர்கள் கணக்கு.
ஆனால் வரலாற்றின் கணக்கு வேறாக இருந்தது. அஜின்கோர்ட் யுத்தத்தின் முடிவில், பிரெஞ்சுக்காரர்கள் எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. வெற்றிபெற்ற ஆங்கிலேயப் போர்வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நடுவிரலை பிரெஞ்சுக்காரர்கள் முன் ஆட்டிக்காட்டி வெறுப்பேற்றினார்கள்.. பார்த்தாயா.. எங்கள் விரல் எங்களிடமே இருக்கிறதென்று..!
இதுவே நாளடைவில் நையாண்டியின் அறிகுறிச்சைகையாக மாறிப்போயிற்று..!
No comments:
Post a Comment