நானும் ப்ளாக் எழுதனும்னு பொழுது போகாமல் இதை உருவாக்கியிருக்கேன். படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். கொஞ்சம் பயனுள்ளதாகவும் இருக்கும்.
Tuesday, September 30, 2008
கொலு வைப்பதன் தத்துவம்!
ஒன்பது படிகள் :
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
Thursday, September 25, 2008
நடுவிரல் நையாண்டி
பிரபல அஜின்கோர்ட் யுத்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? கி.பி. 1415ம் ஆண்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த அந்த அஜின்கோர்ட் போரில் பிரெஞ்சு கை ஓங்கிவந்த நேரம்..
பிரெஞ்சு தளபதிகள் ஒரு விபரீத திட்டம் தீட்டினார்கள்.. தங்களிடம் போர்க்கைதியாக பிடிபடும் வெள்ளை வீரர்களின் நடுவிரலை மட்டும் வெட்டிவிடுவது என்பதே அது..! அந்தக்காலங்களில் வில்லில் நாண் ஏற்றி அம்பு எய்வதற்கு நடுவிரல் மிக அவசியமானதாக இருந்தது. அந்த விரலை அகற்றிவிட்டால், எதிரிகள் பயனற்றுப் போய்விடுவார்கள் என்பது பிரெஞ்சுக்காரர்கள் கணக்கு.
ஆனால் வரலாற்றின் கணக்கு வேறாக இருந்தது. அஜின்கோர்ட் யுத்தத்தின் முடிவில், பிரெஞ்சுக்காரர்கள் எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. வெற்றிபெற்ற ஆங்கிலேயப் போர்வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நடுவிரலை பிரெஞ்சுக்காரர்கள் முன் ஆட்டிக்காட்டி வெறுப்பேற்றினார்கள்.. பார்த்தாயா.. எங்கள் விரல் எங்களிடமே இருக்கிறதென்று..!
இதுவே நாளடைவில் நையாண்டியின் அறிகுறிச்சைகையாக மாறிப்போயிற்று..!
Wednesday, September 24, 2008
புரட்டாசி சனி விரத மகிமை....
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வார்கள். பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், "" பெருமாளே, நீயே எல்லாம்'' என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.
அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. பெருமாள் பணக்காரர் தான்! ஆனாலும், எளிமையை விரும்புகிறார் கவனித்தீர்களா?
Sunday, September 14, 2008
அறிஞர் அண்ணா
அவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். 1957 ஆம் ஆண்டு வரை தி.மு.க, ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்துவந்தது. 1957 ல் நடைபெற்ற தேர்தலில் கலந்து கொள்ள முடிவு செய்த கழகம், அத்தேர்தலில் 15 இடங்களை வென்றபோது அண்ணாதுரையும் சட்ட சபை உறுப்பினரானார். தொடர்ந்து வந்த பத்தாண்டு காலத்தில், தமிழ் மக்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட, மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியதன் மூலம், தி.மு.க வை ஒரு பலம் மிக்க அரசியல் இயக்கமாக வழி நடத்திச் சென்றார். இதன் காரணமாக 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.
அறிஞர் அண்ணாதான் முதன்முதலில்
1. அண்ணாதான் முதன்முதலில் அரசியலில் ஈடுபட்டும் இலக்கியப் பணியைத் தொடர்ந்தவர்.
2, அரசியலில் இருந்துகொண்டே இலக்கியத்தில் சிறுகதை, நெடுங்கதை, சரித்திர நெடுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், உரையாடல்கள், கடிதங்கள் என எல்லா பிரிவிலும் தனி முத்திரை பதித்தவர் - முதன்முதலில்
3. தமிழக இந்தி எதிர்ப்பு வரவாற்றின் முதல் சாவாதிகாரர் அண்ணாதான் - 1938-ல் இந்தியை எதிர்த்து சிறை சென்றவர்.
4. முதன்முதலில் தான் எழுதிய சந்திரோதயம் எனும் சமூக நாடகத்தில் தானே மூன்று வேடங்களில் நடித்து இயக்கி தன் பணிமனைத் தோழர்களையே நடிக்க வைத்தவர்.
5. 1943-ல் முதன்முதலில் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் அடுக்குமோழியைக் கையாண்டவர்.
6. ஓர் இரவு எனும் ஓர் இரவில் நடக்கும் நகிழ்ச்சிகளை அமைத்து ஒரு நாடகத்தை எழுதியவர் - முதன்முதலில் - 1945 ல்.
7. ஓர் இரவு நாடகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை பின்னோக்கிய காட்சிகளாக ((Flash Back) அமைத்தவர் - முதன்முதலில்
8. முதன்முதலில் வேலைக்காரி எனும் நாடகத்தில் வழக்கு மன்ற காட்சிகளை அமைத்தவர்.
9. தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்த திரு.வி.கல்யாணசுந்தரனார், அண்ணாவை பாராட்டுகிறபோது இனி திரு.வி.க நடை என்பது மறைந்து அண்ணாத்துரை நடை என வழங்கும் எனப் பாராட்டினார் - முதன்முதலில் அந்தப் பெருமையைப் பெற்றவர் அண்ணா.
10. அண்ணாதான் முதன்முதலில் ’வேலைக்காரி’ திரைப்படத்தின் மூலம் புதுமைக் கருத்துக்களைச் சொன்னவர்.
11. சமகாலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகர்சாமி போன்றவர்களுக்கு நிதி திரட்டித் தந்தவர், முதன்முதலில் அண்ணாதான் 1946-ல்
12. பாவலர்கள் மத்தியில் இருந்த தமிழை முதன்முதலில் பாமரர்களிடம் கொண்டு வந்தவர் அண்ணா.
13, முதன்முதலில் அண்ணாதான் ஓர் இரவு திரைப்படத்திற்கு ரூ. 20,000 ஊதியம் வாங்கியவர்.
14. கல்கி கிருட்டிணமூர்த்தி என்கின்ற சமகால எழுத்தாளர் முதன்முதலில் பாராட்டியது அண்ணாவைத்தான் - இதோ ஒரு பெர்னாட்சா, இதோ ஓர் இப்சன் என்று.
15. அண்ணாதான் முதன்முதலில், வானொலியில் பல தலைப்புகளில் பல நேரங்களில் சொற்பொழிவு ஆற்றியவர்.
16. அண்ணாதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த சொற்பொழிவாளாராக விளங்கியவர்
17. கம்பராமாயணம், பெரிய புராணம் இவைகளை நன்கு கற்றுத்தேர்ந்து, புலவர்களும், தமிழறிஞர்களும் மறுக்க முடியாத வாதங்களை எடுத்து வைத்து வாதிட்டவர் - முதன்முதலில் ஒரு புதிய கோணத்தில் திறனாய்வு செய்தவர்.
18. அந்தத் திறனாய்வுக் கருத்துக்களை எளிய மக்களுக்கும் புரியவைக்கும் விதத்தில் நாடகமாக்கியவர் - நீதி தேவன் மயக்கம் எனும் பெயரில் - முதன்முதலில் அண்ணாதான்.
19. தான் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் ஈடுபடலாமா என்பதை முடிவெடுக்கக் கழக மாநாட்டில் வாக்குப்பெட்டி அமைத்து மக்களிடம் கருத்து கேட்டவர் முதன்முதலில்.
20. திறனாய்வு செய்கின்ற கோணத்தில், அண்ணாதான் முதன்முதலில் சில நாடகங்களை ஆக்கியவர். அவை, நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், கட்டை விரல், இளங்கோவின் சபதம், பிடிசாம்பல், தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில் ஒமகுண்டம் ஆகிய புதினங்கள்.
21. சொற்பொழிவுகளைக் கட்டணம் செலுத்தி மக்கள் கேட்டது தமிழகத்தில் முதன்முதலில் - அண்ணாவின் சொற்பொழிவைத்தான்.
22. முதன்முதலில் தமிழில் பல புதிய சொற்களைச் சொல்லாக்கம் செய்தவர் அண்ணாதான்.
23. தன் தொண்டர்களை ’தம்பி’ என பாசமுடன் அழைத்தது அண்ணாதான். அதேபோல் தன் தலைவனை அண்ணனாகவே பாவித்து அண்ணா என்று தொண்டர் அழைத்தது - முதன்முதலில் இவரைத்தான்.
24. தன் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருந்தபோதே தனக்கு அடுத்து இருந்தவரை, கட்சியின் பொதுச் செயலாளராக்கி தம்பி வா தலைமை ஏற்கவா என விளித்த முதல் அரசியல்வாதி.
25. சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்தபோது அன்றைய முதல்வரை தன் தொகுதிக்கு அழைத்து தன் தொகுதிமக்களுடன் நேருக்குநேர் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
26. கட்சி மாநாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி அறிவு விளக்கம் தந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
27. அன்றாட வழக்கில், நடைமுறையில் இருந்த வடமொழிச் சொற்களை நீக்கி, தமிழ்ச் சொற்களை புகுத்தியவர் அண்ணாதான் - முதன்முதலில்.
28, இந்த நாட்டு மக்கள் விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும், அரசியல்வாதிகளுக்கல்ல எனச் சொன்ன முதல் அரசியல்வாதி அண்ணாதான்.
29. அரசியல் போராட்டத்தில் கைதாகி நீதிபதி முன் தனக்காகத் தானே வாதாடிய முதல் அரசியல்வாதி அண்ணாதான்.
30. திராவிடநாடு பிரிவினைப்பற்றி இந்தியத் துணைக்கண்ட பாராளுமன்றத்தில் முதன்முதலில் பேசிய தமிழர் அண்ணாதான்.
31. இன்றைய புதுக்கவிதையை முதன்முதலில் புதுப்பா என சொல்லாடல் செய்தவர்
32. அண்ணாதான் முதன்முதலில் ஆளுங்கட்சி காங்கிரசைப் பார்த்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னின்ன திட்டங்களை நிறைவேற்றுங்கள், நான் சார்ந்திருக்கிற திராவிட முன்னேற்றக் கழகம் 15 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாது என அறிவித்த அரசியல்வாதி.
33. அண்ணாதான் முதன்முதலில் தன் காலத்தில் பல துறைகளில் சிறப்புடன் வாழ்ந்தவரை அடைமொழியுடன் அழைத்தார் - அதவே பின்னாளில் நிலைபெற்றது. வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சித்தனைச்சிற்பி சிங்காரவேலர், உத்தமர் காந்தி, கொடுமுடி கோகிலம் (கே.பி.சுந்தராம்பாள்), நடிகமணி டி.வி.நாராயணசாமி, நடிப்பிசைப் புலவர் (கே.ஆர்.ராமசாமி)
34, அண்ணாவின் சிவாஜி கண்ட இநது ராஜ்யம் எனும் நாடகத்தில் முதன்முதலில் சிவாஜியாக நடித்த வி.சி.கனேசன் இன்றுவரை சிவாஜி என்றே அழைக்கப்படுகிறார்.
35. தன் தலைவர் பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய அண்ணா, தான் தொடங்கிய கட்சிக்கு தலைவர் பெரியாரே, தலைவர் நாற்காலி இங்கு காலியாகத்தான் இருக்கும் என அறிவித்து அவ்வழியே நடந்து காட்டியவர் முதன்முதலில் அண்ணாதான்.
36. பெரியாரைப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 20 ஆண்டுகள் தலைவரைத் தாக்காமல் கட்சி நடத்தி அரசையும் கைப்பற்றிப் பகைமை மறந்து, தலைவரைப் பார்த்து இந்த ஆட்சி தங்களுக்கு காணிக்கை என அறிவித்த ஒரே மனிதர் - இவ்வுலகில் அண்ணா ஒருவர்தான் - முதன்முதலில்
37. அண்ணாதான் முதன்முதலில் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து, சுவரொட்டிகளில் மனதில் பதியவைக்கும் கருத்துக்களைச் சுருங்கச்சொல்லிப் பிரச்சாரத்தில் புதிய யுத்தியைக் கையாண்டவர்.
38. முதல்வரான பிறகு இவர்தான் முதன்முதலில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் விழாவுக்கெல்லாம் அவர்களை பின்தொடராமல், தங்கள் பணியை செய்யலாம் என்று சுற்றறிக்கை அனுப்பியவர்.
39. முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய முதல் தமிழர்.
40. முதன்முதலில் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனும் சட்டத்தைச் செய்தவர் இவர்தான்.
41. ஆங்கிலம் தமிழ் போதும் - இந்தி வேண்டாம் என் இரு மொழி திட்டத்தைக் கொண்டு வந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
42. எரியும் குடிசைகளை அகற்றி ஏழைகளுக்கு எரியா வீடுகளை கட்டிக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
43. முதன்முதலில் தமிழ்நாட்டில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியவர், தமிழ்ப் போராளிகளுக்கு கடற்கரையில் சிலை நிறுவியவர்
44. முதன்முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கியவர் ஏழைகளுக்கு.
45. முதன்முதலில் புன்செய் நிலங்களுக்கு வரியைத் தள்ளுபடி செய்தவர்.
46. அண்ணாதான் சீரணி என்ற அமைப்பை முதன்முதலில் தொடங்கினார். பொதுத்தொண்டில் ஆர்வமுள்ள எவரும் எந்த பலனும் எதிர்பாராமல் ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய சிறு சிறு பணிகளில் ஈடுபட்டு தங்கள் உழைப்பை நல்கும் திட்டமிது. நகர் கிராமப்புறம் இரண்டிலும் தன் உள்ளத்தை திறந்துக் காட்டி, எதையும் மறைக்காமல், இயலாததை இயலாது என்றும், தவறாயிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன், திருத்திக்கொள்கிறேன் என்றும் சொன்ன முதல் அரசியல்வாதி.
47. எனக்கென்று எந்தத் தனி ஆற்றலும் இல்லை. என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டுச் சக்தியின் உரிமையாளன் நான் - எனச் சொன்ன முதல் அரசியல்வாதி.
48. அமெரிக்க பல்கலைகழகமான யேல் பல்கலைக்கழகம் சப்பெலோசிப் எனும் சிறப்பை வழங்கியது அண்ணாவுக்குத்தான். அண்ணாதான் இந்த சிறப்பைப் பெற்ற முதல் தமிழர் - முதல் ஆசிரியர்.
49. உலகத்தில் வாழ்ந்த தலைவர்களின் மறைவின்போது, எவருக்கும் சேராத பெருங்கூட்டம் அண்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது - முதன்முதலில் - வரலாற்றில்.
50. அரசு அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தவர்.
( டாக்டர் அண்ணா பரிமளம் )
நன்றி: முத்தமிழ்மன்றம்
Tuesday, September 9, 2008
சில கீரை வகைகளும் பலன்களும்
மஞ்சள் கரிசாலங்கண்ணி:- காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.
செம்பருத்தி:- மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.
மணத்தக்காளி கீரை:- இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். World best ointment.
தும்பை:- பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.
வெங்காயமும் பூண்டும்:- கிருமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.
குப்பைமேனி:- ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பூசலாம். சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.
Friday, September 5, 2008
உங்களுக்குத் தெரியுமா..?
*உலகப் புகழ்பெற்ற கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். அவரது காலம் கி.மு. 323 முதல் கி.மு. 356 முடியவாகும்.
*சிலுவையில் அறையபட்டு உயிர் நீத்த போது இயேசு கிறிஸ்துவின் வயதும் முப்பத்து மூன்றுதான்.
*மூன்று மூல நிறங்கள் என்பன சிவப்பு, மஞ்சள், நீலம்.
*மனிதனுக்கு 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.
*"வீட்டோ' என்னும் பொருள் நான் தடுக்கிறேன் என்பதாகும்.
*கோரம் என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். "கோரம்' என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.
*கடல் குதிரையும், ஓணானும் ஒரு கண்ணை அசைக்காமல் மற்ற கண்ணை வேறுபக்கமாக அசைக்கக் கூடியவை.
*"குட் பை' என்னும் சொல் " God be with you' என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.
*இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.
*பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் "புன்னாக வராளி'.
*இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.
*அமெரிக்க விமானப்படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.
*மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.
* மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.
* மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.
Wednesday, September 3, 2008
பிள்ளையார்.. சில தகவல்கள்..!
கடைச்சங்க காலம் வரையில் கணபதியைப்பற்றி எவ்வித பாடல்களும் இல்லை. தமிழகத்துக்கு வந்த லேட்டஸ்ட் கடவுள் நம் பிள்ளையார்.
கி.பி. ஏழாம் நூற்றான்டுவரை வடநாட்டில் கொழுக்கட்டை தின்றுகொண்டு நிம்மதியாக இருந்தார் விக்நேஸ்வரர்.
வாதாபியை ஆண்ட சாளுக்கியர்கள் மீது படையெடுத்துச் சென்ற ( பிற்கால வரலாறு சிறு தொண்டர் என்று இனம்காணப்போகிற) பல்லவப்படை தளபதி பரஞ்சோதி ( எங்க மாவட்டத்துக் காரருங்கோ..!) வெற்றியோடு விநாயகரையும் தமிழகத்துக்கு கொண்டுவந்தார். அவ்வாறு கொண்டுவந்த ஐங்கரனின் உருவம் ஒன்றை தன் சொந்த ஊரான திருச்செங்காட்டாங்குடியில் (இந்த ஊர்காரங்க யாரும் இருக்கீங்களாப்பு..?) நிறுவினார். மற்றவற்றை பக்கத்து ஊர்களான திருப்புகளூரிலும், திரு ஆரூரிலும் அமைத்தார்.
வாதாபி கணபதிம் பஜே..!
அப்புறம் நம் தமிழகத்து கார்ட்டூனிஸ்டுகளுக்கும், ஓவியர்களுக்கும் எல்லாவித கெட் அப்புகளுக்கும் பொருந்திப்போகிற ஒரு மாடல் வசமாகக் கிடைத்தார்.. ஸ்பூனிலும் பால் குடித்தார்.
பிள்ளையார்பட்டியில் மூல தெய்வம் சிவபெருமானைப் பின்னுக்குத் தள்ளி ஃபேமஸ் ஆனார். ( சும்மா.. வேடிக்கைக்கு..! நம்ம ஆளை நாம கலாய்க்காமலா..?!!)
இன்றைய ஹீரோவின் சில பெயர்க் காரணங்கள்..
கணபதி: பிரமகணம், தேவகணம், பூதகணம் அசுரகணம் மனிதகணம் முதலிய சர்வ கணங்கட்கும் தலைவர்
எனப்பொருள்.
விக்னேசுவரர்; விக்கினம் என்றால் இடையூறு. விக்னேசுரர் என்றால் இடையூறு நீக்குபவர்
எனப்பொருள்.
ஐங்கரன் : விநாயகர், ஐந்து கரங்களை உடையவர். ஆதலால் 'ஐங்கரன்" என்பர்.
பிள்ளையார் சுழி : எதை எழுதத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழிபோட்டே எழுதுவர்.
பிள்ளையார் சுழி 'உ' ஒரு வட்டமும், ஒரு கோடும் இணைந்த நிலை. 0 பிந்து; --- நாதம். இது
பிள்ளையார், சிவசக்தியின் இணைப்பு என்பதை உணர்த்தும். அவரை வழிபடாமல் செய்யும் காரியம் வெற்றி
அடையாது!
What is Halal
In Arabic, the word halal means permitted or lawful. Halal foods are foods that are allowed under Islamic dietary guidelines. According to these guidelines gathered from the Qu'ran, Muslim followers cannot consume the following:
pork or pork by products
animals that were dead prior to slaughtering
animals not slaughtered properly or not slaughtered in the name of Allah
blood and blood by products
alcohol
carnivorous animals
birds of prey
land animals without external ears
These prohibited foods and ingredients are called haram, meaning forbidden in Arabic.
Halal is One of the Most Humane Methods of Animal Slaughter
Muslims are taught through the Qu'ran that all animals should be treated with respect and well cared for. The goal is to slaughter the animal, limiting the amount of pain the animal will endure.
Note: When an animal is slaughtered, the jugular vein is cut and the blood is allowed to drain from the animal. Remember, Muslims are prohibited from consuming animal blood.
Tuesday, September 2, 2008
Who sets global crude oil prices?
As crude oil is setting the global economy on fire and igniting fears of recession, there is a frequent question people ask. Who sets the oil prices?
The answer generally comes: oil price is set by the Organization of Petroleum Exporting Countries, a permanent intergovernmental oil organisation, created in 1960 by Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezuela.
But the fact is that it is not OPEC that sets the global oil price. One of the most common misconceptions about OPEC is that the organisation is responsible for setting crude oil prices.
Although OPEC did in fact set crude oil prices from the early 1970s to the mid-1980s, this is no longer the case. It is true that OPEC's member countries do voluntary restrain their crude oil production in order to stabilise the oil market and avoid harmful and unnecessary price fluctuations, but this is not the same thing as setting prices.
In today's complex global markets, the price of crude oil is set by movements on the three major international petroleum exchanges, all of which have their own Web sites featuring information about oil prices.
They are the New York Mercantile Exchange (NYMEX, http://www.nymex.com), the International Petroleum Exchange in London (IPE, http://www.ipe.uk.com) and the Singapore International Monetary Exchange (SIMEX, http://www.simex.com.sg).
OPEC does not control the oil market. OPEC member countries produce about 45 per cent of the world's crude oil and 18 per cent of its natural gas.
However, OPEC's oil exports represent about 55 per cent of the crude oil traded internationally. Therefore, OPEC can have a strong influence on the oil market, especially if it decides to reduce or increase its level of production.
Source:Rediff Money
தெரிஞ்சிக்கோங்க...
முக்கனிகள் எவை?
மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம்
முக்குணங்கள் எவை?
இராசதம், தாமதம்,சாத்விகம்
முக்கண்ணன் யார்?
சிவன்
முப்பொருள்கள் எவை?
பதி, பசு, பாசம்
மும்மூர்த்திகள் யார்;?
சிவன், விஷ்ணு, பிரம்மா
மும்மலங்கள் எவை?
ஆணவம், கன்மம், மாயை
நாற்குணங்கள் எவை?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாற்படைகள் எவை?
காலால்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை
ஐம்புலன்கள் எவை?
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல்
ஐம்பொறிகள் எவை?
கண், காது, வாய், மூக்கு, மெய்
ஐம்பூதங்கள் எவை?
காற்று, மழை, அக்கினி, ப10மி, ஆகாயம்
ஐம்பெருங்காப்பியங்கள் எவை?
மணிமேகலை, குணடலகேசி, சிலப்பதிகாரம், வளையாபதி, சீவகசிந்தாமணி
ஐந்திணைகள் எவை?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
ஐந்தொழில்கள் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்
ஐந்தெழுத்து(பஞ்சாட்சர) மந்திரம் என்ன?
நமசிவாய