Sunday, May 13, 2007

குறுந்தகவல் - 3

இலவசம்


இலவசம்


இலவசம்

ஒரு புக் வாங்கினா, ஒரு கார் இலவசம்.

அப்படியா?

என்ன புக்?


"R.C. புக் "

-----------------------------

நோயாளி - டாக்டர் நீங்க எனக்கு ஒரு காரியம் பண்ணனும்.
மருத்துவர் = நான் ஆபரேஷன் தான் பண்ணுவேன், காரியமெல்லாம் உங்க வீட்டில் உள்ளவங்கதான் செய்யனும்.

-----------------------------

"பயணங்கள் முடிவதில்லை"
"அலைகள் ஓய்வதில்லை"
"கோபுரங்கள் சாய்வதில்லை"
"நீங்கள் மெஷேஜ் அனுப்புவதில்லை"
"நானும் விடப்போவதில்லை"

----------------------------

மனைவி: ராத்திரி நீங்க ஏன் சிரிச்சீங்க?
கணவன்: கனவுல அசின் வந்தா.
மனைவி: அப்புறமா ஏன் கத்துனீங்க?
கணவன்: கொஞ்சம் நேரம் ஆன பிறகு நீ வந்துட்ட.

-----------------------------

மனிதன்1: சார் ஜீவன்தாரா பாலிசி இருக்கு, எடுத்துக்குறீங்களா?
மனிதன்2: நயன்தாரா இருந்தா சொல்லுங்க எடுத்துக்குறேன்.

-----------------------------

நான் ஒரு ஓவியன். ஆனால் உங்கலை வரைய முடியவில்லை.
ஏன் தெரியுமா, ரோஜாவை வரைந்து விடலாம்.
அதன் வாசத்தை எப்படி வரைய முடியும்.

--------------------------------

இன்றைய சூப்பர் பஞ்ச்
SMS அனுப்பி உங்க இன்பாக்ஸை நிரப்புவது எனது விருப்பமல்ல
அன்பால் உங்கள் இதயத்தை நிரப்புவதே என் விருப்பம்.

--------------------------------

மத்தவங்களுக்கு நட்பு ஒரு sms மெசேஜ் -ல மட்டும் இருக்கலாம்.
ஆனா நம்ம நட்பு மத்தவங்களுக்கு ஒரு மெசேஜா இருக்கட்டும்.


---------------------------------

மனைவி: ஏன் உங்களுக்கு ராணினு ஒரு வொய்ப் இருக்குறதா சொல்லலை.
கணவன்: நாந்தான் உன்னை "ராணி" மாதிரி வெச்சிக்கிறேன்னு சொன்னேன்ல.

---------------------------------

நீ அழுதால் அழுவதற்கும், நீ சிரித்தால் சிரிப்பதற்கும் கண்ணாடி மட்டுமல்ல, நானும் இருக்கிறேன்.

---------------------------------

அதிகமா படித்தவர்கள் இருமலுக்கு மருந்து வாங்க மாட்டாங்க.
ஏன்னா, கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் "சிரப்'பு

No comments: