நானும் ப்ளாக் எழுதனும்னு பொழுது போகாமல் இதை உருவாக்கியிருக்கேன். படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். கொஞ்சம் பயனுள்ளதாகவும் இருக்கும்.
Tuesday, February 26, 2013
குழந்தைகள் பொய்சொல்வதில்லை
என் பையன் இப்ப PRE.K.G. படிக்கிறான். இப்ப படிக்கிற பள்ளி ஆரம்பித்து 2 வருடம்தான் ஆகிறது. இங்க மிகபிரபலமான வேற ஒரு ஸ்கூல் இருக்கு. அங்க LKGல சேர்க்க முடிவு செய்தோம். திங்கள்கிழமை நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லியிருந்தார்கள். திங்கள் என்பதால் PreKGபடிக்கிற அந்த பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுவிட்டு நேர்முகத்தேர்வுக்கு போய்ட்டோம். அடுத்த நாள் காலையில் ஸ்கூலுக்கு கிளம்பிகிட்டு இருந்தான். நான் மெதுவா ஸ்கூல்ல டீச்சர் "நேத்து ஏன் வரலைன்னு" கேட்டா என்ன சொல்லுவனு கேட்டேன். அதுக்கு தெளிவா Modern ஸ்கூலுக்கு போய்ட்டேன் அதான் வரலைன்னு சொல்லுவேன்ப்பா என்றான்.
இப்படி சொன்னா அவங்க டீச்சர் இவனுக்கு ஒழுங்கா கவனிக்க மாட்டாங்களேன்னு நினைச்சி பையன்கிட்ட "அப்படி சொல்லாத, உனக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லிடு" அப்படின்னு சொன்னேன். நைட் ஆபீஸ்ல இருந்து வந்ததும் நான் அவன்கிட்ட மிஸ் எதுவும் கேட்டாங்களாடா ஏன் வரலைன்னு, கேட்டேன். "ஆமாப்பா கேட்டாங்க, நான் modern ஸ்கூலுக்கு போனேன்னு சொல்லிட்டேன்" அப்படின்னான். குழந்தைகளை நாமா மாத்தனும் நினைச்சாலும் அவங்களுக்கு சும்மா பொய் சொல்ல வராது. அவங்களுக்கு உண்மைதான் எளிதா வரும். நாமா தினித்தாலும் வருவது ரொம்பவே சிரமம். இதில் விதிவிலக்கும் இருக்கு.
பார்க்கலாம் எதிர்காலத்துல நம்ம கிட்ட பொய் சொல்லாம இருக்காங்களான்னு
Subscribe to:
Posts (Atom)