Friday, July 30, 2010

3 ஓவரில் 100 ரன்கள்

கிரிக்கெட்டில் 3 ஓவரில் ஒருவர் சதமடிக்கமுடியுமா? அடித்திருக்கிறார் ஒரு ஜாம்பவான். அவர் யாரா இருக்கும்? உங்களால் யூகிக்க முடிகிறதா? அவரே தாங்க, டான் பிராட்மேன் தான் அந்த சாகச மனிதர். ஆனா இது உள்ளூர் போட்டியில் நிக்ழத்தப்பட்ட சாதனை. சரி இது எப்படி சாத்தியம் என்பது தானே உங்கள் கேள்வி. இதே விடை.


இப்ப இருக்கிற மாதிரி அப்போ ஒரு ஓவருக்கு 6 பந்துகள் கிடையாது, மொத்தம் 8 பந்துகள். இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட நேரம் 1931, நவம்பர் 2ம் தேதி. ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடந்த போட்டி இது. 
சரி இப்போ எப்படி 100 ரன்கள் அடித்தார் என்று பார்ப்போம் 


முதல் ஓவரை வீசியவர் பிளாக். இந்த ஓவரில் மொத்தம் 33 ரன்கள் (6,6,4,2,4,4,6,1), அடுத்த ஓவர் பேக்கர். இந்த ஓவரில் பிராட்மேன் அடித்தது மட்டும் 40 ரன்கள் (6,4,4,6,6,4,6,4) அடுத்து 3வது ஓவரை மீண்டும் பிளாக் வீசினார். இந்த ஓவரில் எடுக்கப்பட்ட ரன்  29 (1,6,6,1,1,4,4,6). இதில் பிராட்மேன் பார்ட்னர் அடித்த ரன்கள் 2. மிகச்சரியாக 100 ரன்களை 3 ஓவரில் பிராட்மேன் அடித்து முடித்தார்.
கிட்டத்தட்ட 20-20 போட்டியை விட சுவாரசியமா இருந்தது அவரோட பேட்டிங். பிராட்மேன் அவுட் ஆகும் போது எடுத்திருந்த ரன்கள் 256. 


டெஸ்ட் போட்டியில பிராட்மேன் வைத்திருக்கும் சராசரியை மிஞ்ச இப்போதைக்கு ஒருத்தரும் இல்லை. அந்த இலக்கை எட்ட நிச்சயம் நீண்ட காலங்கள் ஆகலாம். பார்க்கலாம் யார் அந்த சாதனை சிகரத்தை எட்டிபிடிக்குறாங்கன்னு!




நன்றி: www.cricinfo.com

Sunday, July 18, 2010

விசுவல் மீடியாவின் - மேகக் கணினி இணைய தளச்சேவை

வணக்கம் நண்பர்களே!

இந்திய இணையத்தள சேவை வரலாற்றில் முதல் முறையாக மேகக் கணினி இணைய தளச் சேவையை - Cloud Hosting சிபேனல் வசதியுடன் நாங்கள் தான் முதலில் வழங்க உள்ளோம் என்பதைத்தச்சொல்லத்தான் இந்த தலைப்பு.
இச்சேவையை பற்றி பார்ப்பதற்கு முன்பு  மேகக்கணினியாக்கம் என்றால் என்ன ன்னு பார்ப்போமா?

வெப்சைட் சேவையை பல நிறுவனங்கள் வழங்கிவருகின்றன என்றாலும் பல நிறுவனங்கள் பணத்தை குறி வைத்து இயங்குகின்றன :) அப்படிப்பட்ட  நிறுவனத்தில் தான் அடியேனும் முதன் முதலில் 2004-ல் வாங்கி மாட்டிக்கொண்டேன். :) அது தனி அனுபவம். ஆனால் அந்த அனுபவம்தான் இன்று தனியாக இணையத்தள சேவையை குறிவைத்து இறங்க காரணமாக அமைந்தது.

இன்றைய காலக்கட்டத்தில் இணையத்தளம் வைத்திருப்பவர்கள் மிக அதிகமான ப்ரச்னைகளை சந்தித்திருக்கிறார்கள். 

  • தாக்கர்களின் ப்ரச்னை
  • கஷ்டப்பட்டு உருவாக்கிய தளத்தினை சிலர் ஸ்பாம் தளங்களில் மாற்றிவிடுவார்கள்.
  • நாம் கேட்ட வசதி கிடைக்காது. அப்படியே கேட்டாலும் மிக அதிகமாக பணம் வாங்குவார்கள்.
  • அதிகப்படியான ட்ராபிக், அதிகப்படியான பைல்கள் ஹோஸ்டிங் செய்வது என்று பல ப்ரச்னைகள் இருக்கிறது.

இப்படிப்பட்ட எந்த ப்ரச்னையும் இல்லாமல் ? வெப்சைட் நடத்த வேண்டுமென்றால் மேகக் கணினி சேவைக்கு மாறிவிடுங்கள்..


  • தாக்கர்கள் தளத்தினை தாக்கிவிட்டால் அதை தாக்கர்களின் தரவுத்தளத்தில் சேமித்துவிடுவார்கள். இப்படி சேமிக்கும்போது பல தாக்கர்கள் தொடர்ச்சியாக தாக்கிக்கொண்டே இருப்பார்கள். அப்போது நம் வழங்கியின் ஐபி யை மாற்றவேண்டுமெனில் தனியாக பணம் கட்டவேண்டும்.
  • ஆனால் மேகக்கணினியில் நம் வழங்கியின் ஐபி முகவரியை உடனடியாக மாற்றிவிடலாம். இதனால் தாக்கர்களிடம் நம் தளம் பற்றிய விபரங்கள் இருந்தாலும் எடுபடாது.
  • குறிப்பு : ஐபி முகவரியை மாற்றவெண்டுமெனில் நாம் கணினியை ரீஸ்டார்ட் செய்யவேண்டும். ஆனால் இங்கே உடனடியாக மாற்றிவிடலாம்.
  • இரண்டாவது ; இதை நமது எல்லாவகையான மென்பொருட்களையும் நிறுவிக்கொள்ளலாம். இது ஒரு நேரடி வழங்கியாகவே பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • அதிகப்படியான ட்ராபிக் னாலும் ப்ரச்னையா? கவலையே வேண்டாம்.
  • இங்கே லோடு பேலன்ஸ் வழியாக அனைத்தையும் எளிதாக சமாளிக்கலாம்.
  • இதைவிட குறிப்பிட்டத்தக்க அளவு உடனடியாக ஹார்டுவேர்களை மேம்படுத்தவோ குறைக்கவோ செய்யலாம்! உடனடியாக.
  • உதாரணத்திற்கு ஒரு தளத்திற்கு ஒரு நாள் மட்டும் அதிகப்படியான ராம்(RAM) வேண்டுமோ, இடம் வேண்டுமோ, அல்லது ப்ராசசரின் வேகம் கூட்டவேண்டுமானால் கூடகூட்டவோ குறைக்கவோ செய்யலாம். சர்வரை ரீஸ்டார்ட் செய்யாமலே உடனுக்குடன்
  • மேலும் தகவல் பாதுகாப்பு என்பது இங்கே அதிகப்படியான வசதியுடன் இருக்கும். எனவே டேட்டா பேக் அப் அதிகப்படியான வசதியும் உண்டு.
  • எல்லாவற்றையும் விட 100% அப்டைம் உறுதி. மெயின்டனஸ் நேரத்தில் மட்டுமே ஆப் செய்யப்படும்.
இச்சேவையை நாங்கள் இந்தியாவில் முதல்முறையாக சிபேனல் வசதியுடன் வழங்குவதில் பெரு மகிழச்சி அடைகிறோம். 
அடுத்து சொந்தமாகவே டேட்டாசென்டர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன். அதுவும் அதிகப்பட்சம் ஒரு வருடத்தில் நடைபெறும் என்று நம்புகிறேன்.
அதிகப்பட்ச நுட்ப வசதி / குறைந்த செலவில் வழங்கவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் :)

இதுபோன்று நாங்கள் தொழில்நுட்ப அளவில் பல அரிய வசதிகளையும் அளிக்க இருக்கிறோம்.
மொபைலில் இருந்து கணினிக்கு பேசுவது, மொபைலில் இருந்து கணினிக்கு கான்பரன்ஸ் வழியாக பேசுவது ,
இணையத்தளத்தில் தாக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் மென்பொருட்களையும், இணையத்தளங்களுக்கு சோதித்துவருகிறேன். வெகு விரைவில் அவைகளும் வெளியிடப்படும்....

அதிகப்பட்ச நுட்ப வசதி/ குறைந்த செலவில்
மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் தயங்காமல் கேளுங்கள்

நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ முரளி
www.visualmedia.com