எத்தனை கோடி ரசிகர்களின் கனவு!!
யார் முதலில் எட்டுவார் இந்த சாதனையை என்று காத்திருந்தவர்கள் எத்தனை பேர்
எத்தனை வருடங்கள் காத்திருந்தோம்!!
இனி எத்தனை பேர் 200 அடித்தாலும் அது சாதாரணமாகத்தான் தெரியும்!
ஆனால் இப்பொழுதோ இது சரித்திரம்.
36 வயதிலும் எத்தனை வேகம்!!!
200 அடித்த பின்னும் எந்த ஒரு ஆர்பாட்டமும் இல்லாமல் எத்தனை பேரால் இப்படி அமைதியாக இருக்க முடியும்?
சச்சினின் சாதனை பட்டியலே சதமடித்து விட்டது!
சாதனை நாயகனுக்கு வாழ்த்துக்கள்