இன்னைக்கு எல்லா தொலைக்காட்சிச் செய்திகளிலும் தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் 10 நிமிடங்களிலேயே காலியாகி விட்டன என்ற செய்தி நிச்சயம் இடம் பெற்றிருக்கும். சரி அவங்களுக்கு முன்னாடி நாமளே இதை சொல்லிடலாம்னு தான் இந்த பதிவு.
ஆனா பத்து நிமிடம் என்பதெல்லாம் ரொம்ப அதிகமுங்க.8 மணிக்கு தொடங்கிய பதிவு 8.03க்கு எல்லாம் RAC, WL நிலைக்கு போயிடுச்சி. நிச்சயம் தோராயமா 12000 டிக்கெட் விற்றிருக்க வாய்ப்பு இருக்கு. பாண்டியனில் நான் 8.05க்கு பார்க்கும் போது 305 WL என்று பார்க்க முடிந்தது. ரயில் நிலையத்தில் காலையிலேயே விரைவில் வந்து வரிசையில் காத்திருந்து ஏமாந்து போனவர்கள் அனைவரும் இன்று ஆன் லைனில் புக்கிங் செய்பவர்களுக்கு சாபம் விட்டிருப்பார்கள். இதே நிலை ஆன்லைன்ல 5 நிமிசத்துல 300 வெயிட்டிங் அப்படின்னு பார்த்தவங்களும் திட்டி தீர்திருக்க வாய்ப்பிருக்கிறது.
கடந்த ஆண்டு ஆன்லைன் புக்கிங்கில் ரயில்வே சில திள்ளுமுள்ளு செய்ததாக தின நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது பலருக்கும் நினைவிருக்கலாம். தக்கல் என்று சொல்லப்படம் பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கும் முன் பதிவு செய்யும் டிக்கெட்டுகளின் சதவீதம் சில ரயில்களில் 60% அதிகமாக ஆக்கியதாக செய்தி வெளியானது. இந்த ஆண்டு நிலை என்னவென்று விரைவில் வெளிவரலாம்.
கொசுறு: எப்படியோ ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு RAC ல டிக்கெட் கிடைச்சிருச்சி சாமியோ!!!
நானும் ப்ளாக் எழுதனும்னு பொழுது போகாமல் இதை உருவாக்கியிருக்கேன். படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். கொஞ்சம் பயனுள்ளதாகவும் இருக்கும்.
Thursday, August 5, 2010
Friday, July 30, 2010
3 ஓவரில் 100 ரன்கள்
கிரிக்கெட்டில் 3 ஓவரில் ஒருவர் சதமடிக்கமுடியுமா? அடித்திருக்கிறார் ஒரு ஜாம்பவான். அவர் யாரா இருக்கும்? உங்களால் யூகிக்க முடிகிறதா? அவரே தாங்க, டான் பிராட்மேன் தான் அந்த சாகச மனிதர். ஆனா இது உள்ளூர் போட்டியில் நிக்ழத்தப்பட்ட சாதனை. சரி இது எப்படி சாத்தியம் என்பது தானே உங்கள் கேள்வி. இதே விடை.
இப்ப இருக்கிற மாதிரி அப்போ ஒரு ஓவருக்கு 6 பந்துகள் கிடையாது, மொத்தம் 8 பந்துகள். இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட நேரம் 1931, நவம்பர் 2ம் தேதி. ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களுக்கு இடையே நடந்த போட்டி இது.
சரி இப்போ எப்படி 100 ரன்கள் அடித்தார் என்று பார்ப்போம்
முதல் ஓவரை வீசியவர் பிளாக். இந்த ஓவரில் மொத்தம் 33 ரன்கள் (6,6,4,2,4,4,6,1), அடுத்த ஓவர் பேக்கர். இந்த ஓவரில் பிராட்மேன் அடித்தது மட்டும் 40 ரன்கள் (6,4,4,6,6,4,6,4) அடுத்து 3வது ஓவரை மீண்டும் பிளாக் வீசினார். இந்த ஓவரில் எடுக்கப்பட்ட ரன் 29 (1,6,6,1,1,4,4,6). இதில் பிராட்மேன் பார்ட்னர் அடித்த ரன்கள் 2. மிகச்சரியாக 100 ரன்களை 3 ஓவரில் பிராட்மேன் அடித்து முடித்தார்.
கிட்டத்தட்ட 20-20 போட்டியை விட சுவாரசியமா இருந்தது அவரோட பேட்டிங். பிராட்மேன் அவுட் ஆகும் போது எடுத்திருந்த ரன்கள் 256.
டெஸ்ட் போட்டியில பிராட்மேன் வைத்திருக்கும் சராசரியை மிஞ்ச இப்போதைக்கு ஒருத்தரும் இல்லை. அந்த இலக்கை எட்ட நிச்சயம் நீண்ட காலங்கள் ஆகலாம். பார்க்கலாம் யார் அந்த சாதனை சிகரத்தை எட்டிபிடிக்குறாங்கன்னு!
நன்றி: www.cricinfo.com

Sunday, July 18, 2010
விசுவல் மீடியாவின் - மேகக் கணினி இணைய தளச்சேவை
வணக்கம் நண்பர்களே!
இந்திய இணையத்தள சேவை வரலாற்றில் முதல் முறையாக மேகக் கணினி இணைய தளச் சேவையை - Cloud Hosting சிபேனல் வசதியுடன் நாங்கள் தான் முதலில் வழங்க உள்ளோம் என்பதைத்தச்சொல்லத்தான் இந்த தலைப்பு.
இச்சேவையை பற்றி பார்ப்பதற்கு முன்பு மேகக்கணினியாக்கம் என்றால் என்ன ன்னு பார்ப்போமா?
வெப்சைட் சேவையை பல நிறுவனங்கள் வழங்கிவருகின்றன என்றாலும் பல நிறுவனங்கள் பணத்தை குறி வைத்து இயங்குகின்றன :) அப்படிப்பட்ட நிறுவனத்தில் தான் அடியேனும் முதன் முதலில் 2004-ல் வாங்கி மாட்டிக்கொண்டேன். :) அது தனி அனுபவம். ஆனால் அந்த அனுபவம்தான் இன்று தனியாக இணையத்தள சேவையை குறிவைத்து இறங்க காரணமாக அமைந்தது.
இன்றைய காலக்கட்டத்தில் இணையத்தளம் வைத்திருப்பவர்கள் மிக அதிகமான ப்ரச்னைகளை சந்தித்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட எந்த ப்ரச்னையும் இல்லாமல் ? வெப்சைட் நடத்த வேண்டுமென்றால் மேகக் கணினி சேவைக்கு மாறிவிடுங்கள்..
அடுத்து சொந்தமாகவே டேட்டாசென்டர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன். அதுவும் அதிகப்பட்சம் ஒரு வருடத்தில் நடைபெறும் என்று நம்புகிறேன்.
அதிகப்பட்ச நுட்ப வசதி / குறைந்த செலவில் வழங்கவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் :)
இதுபோன்று நாங்கள் தொழில்நுட்ப அளவில் பல அரிய வசதிகளையும் அளிக்க இருக்கிறோம்.
மொபைலில் இருந்து கணினிக்கு பேசுவது, மொபைலில் இருந்து கணினிக்கு கான்பரன்ஸ் வழியாக பேசுவது ,
இணையத்தளத்தில் தாக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் மென்பொருட்களையும், இணையத்தளங்களுக்கு சோதித்துவருகிறேன். வெகு விரைவில் அவைகளும் வெளியிடப்படும்....
என்றும் அன்புடன்
செல்வ முரளி
www.visualmedia.com

- தாக்கர்களின் ப்ரச்னை
- கஷ்டப்பட்டு உருவாக்கிய தளத்தினை சிலர் ஸ்பாம் தளங்களில் மாற்றிவிடுவார்கள்.
- நாம் கேட்ட வசதி கிடைக்காது. அப்படியே கேட்டாலும் மிக அதிகமாக பணம் வாங்குவார்கள்.
- அதிகப்படியான ட்ராபிக், அதிகப்படியான பைல்கள் ஹோஸ்டிங் செய்வது என்று பல ப்ரச்னைகள் இருக்கிறது.
இப்படிப்பட்ட எந்த ப்ரச்னையும் இல்லாமல் ? வெப்சைட் நடத்த வேண்டுமென்றால் மேகக் கணினி சேவைக்கு மாறிவிடுங்கள்..
- தாக்கர்கள் தளத்தினை தாக்கிவிட்டால் அதை தாக்கர்களின் தரவுத்தளத்தில் சேமித்துவிடுவார்கள். இப்படி சேமிக்கும்போது பல தாக்கர்கள் தொடர்ச்சியாக தாக்கிக்கொண்டே இருப்பார்கள். அப்போது நம் வழங்கியின் ஐபி யை மாற்றவேண்டுமெனில் தனியாக பணம் கட்டவேண்டும்.
- ஆனால் மேகக்கணினியில் நம் வழங்கியின் ஐபி முகவரியை உடனடியாக மாற்றிவிடலாம். இதனால் தாக்கர்களிடம் நம் தளம் பற்றிய விபரங்கள் இருந்தாலும் எடுபடாது.
- குறிப்பு : ஐபி முகவரியை மாற்றவெண்டுமெனில் நாம் கணினியை ரீஸ்டார்ட் செய்யவேண்டும். ஆனால் இங்கே உடனடியாக மாற்றிவிடலாம்.
- இரண்டாவது ; இதை நமது எல்லாவகையான மென்பொருட்களையும் நிறுவிக்கொள்ளலாம். இது ஒரு நேரடி வழங்கியாகவே பயன்படுத்திக்கொள்ளலாம்.
- அதிகப்படியான ட்ராபிக் னாலும் ப்ரச்னையா? கவலையே வேண்டாம்.
- இங்கே லோடு பேலன்ஸ் வழியாக அனைத்தையும் எளிதாக சமாளிக்கலாம்.
- இதைவிட குறிப்பிட்டத்தக்க அளவு உடனடியாக ஹார்டுவேர்களை மேம்படுத்தவோ குறைக்கவோ செய்யலாம்! உடனடியாக.
- உதாரணத்திற்கு ஒரு தளத்திற்கு ஒரு நாள் மட்டும் அதிகப்படியான ராம்(RAM) வேண்டுமோ, இடம் வேண்டுமோ, அல்லது ப்ராசசரின் வேகம் கூட்டவேண்டுமானால் கூடகூட்டவோ குறைக்கவோ செய்யலாம். சர்வரை ரீஸ்டார்ட் செய்யாமலே உடனுக்குடன்
- மேலும் தகவல் பாதுகாப்பு என்பது இங்கே அதிகப்படியான வசதியுடன் இருக்கும். எனவே டேட்டா பேக் அப் அதிகப்படியான வசதியும் உண்டு.
- எல்லாவற்றையும் விட 100% அப்டைம் உறுதி. மெயின்டனஸ் நேரத்தில் மட்டுமே ஆப் செய்யப்படும்.
அடுத்து சொந்தமாகவே டேட்டாசென்டர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன். அதுவும் அதிகப்பட்சம் ஒரு வருடத்தில் நடைபெறும் என்று நம்புகிறேன்.
அதிகப்பட்ச நுட்ப வசதி / குறைந்த செலவில் வழங்கவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் :)
இதுபோன்று நாங்கள் தொழில்நுட்ப அளவில் பல அரிய வசதிகளையும் அளிக்க இருக்கிறோம்.
மொபைலில் இருந்து கணினிக்கு பேசுவது, மொபைலில் இருந்து கணினிக்கு கான்பரன்ஸ் வழியாக பேசுவது ,
இணையத்தளத்தில் தாக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் மென்பொருட்களையும், இணையத்தளங்களுக்கு சோதித்துவருகிறேன். வெகு விரைவில் அவைகளும் வெளியிடப்படும்....
அதிகப்பட்ச நுட்ப வசதி/ குறைந்த செலவில்
நன்றி!மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் தயங்காமல் கேளுங்கள்
என்றும் அன்புடன்
செல்வ முரளி
www.visualmedia.com
Sunday, May 9, 2010
SMS பிரியர்களே வாங்க - 3
பையன்1: மச்சான் அவளை மறக்க முடியலைடா!
பையன்2: அப்படின்னா, உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கடா
பையன்1: இரு மச்சி, எல் கே ஜி ரிசல்ட் வரட்டும்!
அழகான ரெண்டு பொண்ணுங்க போய்ட்டு இருந்தாங்க
அவங்க பின்னாடியே 2 பசங்க போனாங்க
உடனே 2 பொண்ணுங்களும் ஆளுக்கு 1 பையன் கையில ராக்கி கட்டி அண்ணானு சொல்லிட்டாங்க
பையன்1: டேய் மச்சான் என் தங்கச்சிய நீ கட்டிக்க, உன் தங்கச்சிய நான் கட்டிக்கிறேன்
இது எப்படி இருக்கு!!!
யூகேஜி பையன்: நான் இனி ஸ்கூலுக்கு போக மாட்டேன்
அம்மா: எதுக்கு?
பையன்: வேலை செய்யப்போறேன்
அம்மா: யூகேஜி படிச்சிட்டு என்ன வேலை செய்யப்போற?
பையன்: எல்கேஜி பொண்ணுங்களுக்கு டியூசன் எடுப்பேன்!
மீனவன் மீன் பிடித்து வீட்டில் கொடுத்தான். அவன் மனைவியால் மீனை சமைக்க முடியவில்லை. ஏனென்றால் எண்ணெய் இல்லை, கரெண்ட் இல்லை, கேஸ் இல்லை. மீனவன் மறுபடியும் மீனை கடலுக்குள் போட்டுவிட்டான். மீன் வேகமாக மேல வந்து "திமுக" அரசுக்கு நன்றி என்றது!
கணவன்: நீயும் நானும் அமெரிக்கா போற மாதிரி கனவு கண்டேன்.
மனைவி: அப்படியா! எங்கேயெல்லாம் போனோம்?
கணவன்: அசடு, நீயும் தான கூட வந்த, மறந்துட்டியா?!
மகள்: அப்பா நான் சாதிக்க விரும்புறேன்.
அப்பா: வெரிகுட், எந்த துறையிலம்மா?
மகள்: அய்யோ அப்பா, நான் விரும்புற பையன் பேரு சாதிக்
பையன்: நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
பொண்ணு: தேங்க்ஸ்
பையன்: உங்க ஃப்ரண்ட் உங்களை விட சூப்பர்.
பொண்ணு: போடா எருமை!
பையன்: அது உங்க ரெண்டு பேரையும் விட சூப்பர்!
பொண்ணு: அய்யயோ என்னோட பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன். எனக்கு அவசரமா 1000 ரூபாய் வேண்ம்டா, செல்லம் ப்ளீஸ் கொடேன் .
பையன்: இந்த செல்லம் 25 ரூபாய், ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு போய் எடுத்துட்டு வந்திரு செல்லம்.
எக்ஸாம் எனபது காலேஜ் பிஃகர் மாதிரி, காலேஜ் முடியிற வரைக்கும் இருக்கும்.
அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி, பாவி மக நம்மளையே சுத்தி சுத்தி வரும்
ஒரு உயிரின் மதிப்பு அது உயிருடன் இருப்பதை விட இறந்த பின்புதான் அதிகமாகும்.
உதாரணம்: உயிருடன் கோழி ரூ.90/- உறிச்ச கோழி ரூ.130
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Monday, March 1, 2010
பேருந்து பயணம் - அனுபவம்
வெள்ளிக்கிழமை திடீரென்று ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. ஆன்லைனில் பஸ் டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேடுகையில் "சங்கீதா" டிராவல்ஸில் 7 டிக்கெட்டுகள் இருந்தன. சங்கீதா டிராவல்ஸ் ஒவ்வொரு நாளைக்கும் ஒரு விலை என்று சொல்லும் பேருந்து நிறுவனம் என்று கேள்வி பட்டிருக்கிறேன். வேறு வழியில்லாமல் டிக்கெட்டும் புக் செய்தேன். விலை 650 ரூபாய். இதுவே ரிட்டன் டிக்கெட் ஞாயிற்றுக்கிழமை போட்டிருந்தால் விலை ரூ.850 ஆக கொடுக்க வேண்டுமாம். இதுவே சனிக்கிழமை என்றால் ரூ.750. இவ்வளவு பெரிய திருட்டு தனத்தை எங்குமே பார்க்க முடியாது. ஆனாலும் எத்தனை பேர் இந்த மாதிரி கொள்ளைகும்பளிடம் வேறு வழியே இல்லாமல் மாட்டிக்கொண்டு கொடுக்கும் பணத்துக்கு எந்த ஒரு வசதியும் இல்லாமல் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்!
ஏ.சி பஸ் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். இரவு 11 மணிக்கு வரவேண்டிய பஸ் 11.45க்கு வந்தது. பஸ் உள்ளே ஏறும் போதே கெட்ட வாடை. வேர்வைத்துளிகள் சீட்டில் அப்படியே படிந்து இருக்கைகள் ஒரு முறை கூட சுத்தம் செய்யப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியது. சரி ஏ.சி பஸ் தானே, ஏசி போட்டால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று நினைத்துக்கொண்டேன். இருக்கையில் அமர்ந்ததும் மிகப்பெரிய ஆச்சர்யம். உலகத்திலேயே ஏசி பஸ்சில் சன்னல் திறந்து வைக்கும் வசதி கொண்ட வண்டி இதுவாகத்தான் இருக்கும். ஏசி வருவதற்கு என்று தலைக்கு மேலே எல்லாமே இருந்தது. சரி ஏசி போட்டால் போடட்டும் இல்லையென்றால் இருக்கவே இருக்கு இயற்கை ஏசி என்று இதையும் பொறுத்துக்கொண்டேன். பஸ் எடுக்க 12.15 ஆகிவிட்டது. கோபத்தில் இருந்த இரண்டு பேர் கூச்சல் போட உடனே வண்டியை எடுத்து விட்டார்கள். சிறிது நேரத்தில் ஏசி என்று போட்டார்களே பார்க்கலாம், புஸ்ஸ்ஸ் என்று பயங்கர சத்தத்துடன் காற்று வர ஆரம்பித்தது. இது தான் ஏசியாம். அதுவும் கூட 10 நிமிடத்தில் ஆஃப் செய்து விட்டார்கள்.
வண்டி நகரத்தொடங்கிய சிறிது நேரத்துலேயே தெரிந்து விட்டது, சீட் பயங்கர ஆட்டம் கொடுக்கிறது நிச்சயம் நிம்மதியாக தூங்கமுடியாது என்று. நான் மொத்தம் தூங்கிய நேரம் 3 மணி நேரம் தான். அதுவும் இருந்த அசதியில் தூங்கிவிட்டேன். அதற்கு மேல் தூக்கம் வரவில்லை. வண்டியில் உறுப்படியாக இருந்த ஒன்று என்றால் வண்டியின் வேகம் மட்டுமே. எல்லாப்பயலுக கிட்டையும் பணமிருக்கும், அவனுங்களுக்கு நம்மளைவிட்டால் வேறு வழியில்லை, அதனால் எவ்வளவு வேண்டுமானாலும் கறந்துவிடலாம் என்று எண்ணும் இது போன்ற பஸ் நிறுவனங்களை ஏன் நாம் யாரும் கண்டுகொள்வதில்லை?
இதில் எனது நண்பர் பெருமையடித்துக்கொள்கிறார், வேற எந்த பஸ்லையும் டீக்கெட் கிடைக்காட்டாலும் நிச்சயம் சங்கீதாவில் டிக்கெட் கிடைக்கும்டா, அதுல வந்திடுவேன் அப்படின்னு. வசதி எல்லாம் இருக்காது ஊருக்கு திரும்ப வரவேண்டாமா, என்ன பண்றது என்று சொல்லும் இவர்களைப்போல பலர் இருப்பதால் தான் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டமும் பெருகிவிட்டது. கொடுக்கும் பணத்திற்கு உரிய வசதிகள் இருக்கவேண்டாமா? இந்த ஒரு அனுபவத்திலேயே இனி இந்த பேருந்தில் ஏறுவதில்லை, மற்ற வண்டியில் இடமில்லை யென்றாலும் கேபின்ல உட்கார்ந்து கொண்டு செல்லக்கூட தயாராகிவிட்டேன். தெரிந்தே பணத்தை விணாக்குவதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது.
சங்கீதா டிராவல்ஸ்ல இனி பயணம் செய்ய யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். தயவு செய்து அந்த வண்டியில் பயணம் செய்து உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள். இதுவரை வேறு வழியில்லாமல் பயணம் செய்திருந்தாலும் இனி உங்கள் முடிவை மாற்ற முயற்சி செய்யுங்கள். இவர்களை விட பெயர் பெற்ற பல பேருந்துகள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் கூட இந்த கொள்ளை நடந்ததில்லை.
இது எனது தனிப்பட்ட அனுபவம்(பாடம்). உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
Wednesday, February 24, 2010
சச்சின் 200
எத்தனை கோடி ரசிகர்களின் கனவு!!
யார் முதலில் எட்டுவார் இந்த சாதனையை என்று காத்திருந்தவர்கள் எத்தனை பேர்
எத்தனை வருடங்கள் காத்திருந்தோம்!!
இனி எத்தனை பேர் 200 அடித்தாலும் அது சாதாரணமாகத்தான் தெரியும்!
ஆனால் இப்பொழுதோ இது சரித்திரம்.
36 வயதிலும் எத்தனை வேகம்!!!
200 அடித்த பின்னும் எந்த ஒரு ஆர்பாட்டமும் இல்லாமல் எத்தனை பேரால் இப்படி அமைதியாக இருக்க முடியும்?
சச்சினின் சாதனை பட்டியலே சதமடித்து விட்டது!
சாதனை நாயகனுக்கு வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)