
கடைசி செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் அதிரடியாகவே விளையாடினர். ஒருபக்கம் ஃபெடரர் தனது ஏஸ் கணைகளை எறிய மறுபுறம் ரோடிக் தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து முன்னேறினார். இறுதி செட் 90 நிமிடங்களுக்கும் அதிகமாக நீடித்துச் சென்றது. ஃபெடரர் இந்த போட்டியில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமையை எட்ட போராடினார். இதற்கு முன்னர் பீட் சாம்ப்ராஸ் இந்த சாதனையை செய்திருந்தார், அவரும் ஆட்டத்தை காண வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 4 மணி நேரங்களையும் கடந்து ஆட்டம் சென்றது. 50 ஏஸ்களை அடித்து ஃபெடரர் தனது வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 7-5, 6-7.6-7, 6-3, 14-16 என்ற புள்ளிகளில் 4 மணி 15நிமிடங்களில் ஆடி வெற்றி பெற்றார் ஃபெடரர். அத்துடன் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம்(15) வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 6வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை அவர் வென்றுள்ளார். ஆட்டம் முடிந்த சில நிமிடங்களில் கோப்பை பரிசளிப்பு, பேட்டி என்று விரைவாக முடிவடைந்தது.